பிபிசியின், சவுதி அரேபிய ஊழல் ஆவணப்படத்தில் நஜிப்

சவுதி அரச குடும்பத்தைச் சூழ்ந்த மோதல் பற்றி, பிபிசி ஒலிபரப்பு நிறுவனம் தயாரித்த ஓர் ஆவணப்படத்தில் பிரதமர் நஜிப் ரசாக் தோன்றியுள்ளார்.

கடந்த செவ்வாயன்று, முதன்முறையாக ஒலிபரப்பப்பட்ட ‘ஹவுஸ் ஓஃப் சவுட்’ : எ ஃபெமெலி எட் வார் (சவூதியில் ஓர் இல்லம்: போரில் ஒரு குடும்பம்) இரண்டாவது அத்தியாயத்தில், 1எம்டிபி ஊழலில் துருக்கிய இளவரசர் அப்துல்லா அல் சாயின் ஈடுபட்டது தொடர்பில், தனது ஆய்வைத் தொடங்கியுள்ளது பிபிசி.

RM5 பில்லியன் நிதியை 1எம்டிபி வெற்றிகரமாகத் திரட்டியப் பிறகு, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வரையில் அவ்வளவாக அறியப்படாத நிறுவனமான, பெட்ரோசவுடி இன்டர்நேஷனல் – உடன் இணைந்து, 1 பில்லியன் அமெரிக்க டாலரை 1எம்டிபி முதல் முறையாக முதலீடு செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம் துருக்கிய இளவரசர் மற்றும் நஜிப் இடையே, ‘தாதூஸ்’ ஆடம்பரக் கப்பலில் நடந்தது என்றும், அச்சமயம் நஜிப்புடன் அவரது மனைவி மற்றும் மகன் இருந்தனர் என்றும் ‘சரவாக் ரிப்போர்ட்’ ஆசிரியர், கிளேர் ரியுகாஸ்ஸல்-பிரௌண், பிபிசி-யிடம் கூறியுள்ளார்.

“சவுதி இளவரசர் நிறுவனத்தில், 1எம்டிபி 1 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்திருக்கிறது, ஆனால் சில நாட்களுக்குள் 700 மில்லியன் அமெரிக்க டாலர் காணாமல் போய்விட்டது.

“அதன்பின்னர், 1எம்டிபி பில்லியன் கணக்கான டாலர்களை, மற்ற கூட்டு நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளது, அவற்றில் பெரும்பாலான நிதிகளும் காணாமல் போய்விட்டன,” என்று அந்த ஆவணப்படத்தின் நெறியாளர் பேசியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, 1எம்டிபி மற்றும் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில், பெரும் தொகை பரிமாற்றம் செய்யப்பட்டதில் நடந்த  பணமோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை, அமெரிக்கா ஆய்வு செய்தது பற்றியும் அந்த ஆவணப்படம் விளக்குகிறது.

அச்சமயத்தில், துருக்கிய இளவரசருக்கு பெரும் தொகை கமிஷனாக வழங்கப்பட்டது என்றும் பிபிசி கூறியுள்ளது.

இந்த ஆவணப்படம், ராஜா முடா புத்திரா முகமட் சல்மானின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது.

பிபிசி –யின் இக்குற்றச்சாட்டு பற்றி மலேசியாகினி சுதந்திரமாக கருத்துரைக்க முடியாது.

2013-ல், தனது வங்கிக் கணக்கில், மர்மமான முறையில் சேர்க்கப்பட்ட ரிம2.6 பில்லியன், சவுதி அரேபியாவிலிருந்து நன்கொடை வழங்கப்பட்டதாகவும், அதனைத் தனது சுயப்பயன்பாட்டிற்குப் பயன்படுத்தியதில்லை என்றும் நஜிப் பலமுறை கூறியுள்ளார்.

சவுதி அரச குடும்பத்துடன் நஜிப் நெருக்கமாக தோற்றமளிக்கிறார், புத்ராஜெயாவில் 16-ஹெக்டேர் நிலத்தை ராஜா சல்மான் சர்வதேச அமைதி மையத்திற்கு நஜிப் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.