பக்கத்தான் ஹரப்பானின் பிரதமர் வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் மகாதிர் முகமட் மீது பிரதமர் நஜிப் ரசாக் இன்னொரு தாக்குதல் நடத்தினார்.
ஓய்வுபெற்ற 93 வயதான ஒருவர் பிரதமராக வேண்டும் என்று கூறுகிறவர்கள் இருக்கிறார்கள். இதை எந்த நாடும், ஜிம்பாப்வே உட்பட, விரும்புவதில்லை என்று நஜிப் கூறினார்.
கடந்த நவம்பர் மாதத்தில் 93 வயதான ரோபர்ட் முகாபே ஜிம்பாப்வே அதிபர் பதவியிலிருந்து ஓர் இராணுவப் புரட்சியில் நீக்கப்பட்டதை நஜிப் குறிப்பிட்டார்.
நாட்டை வழிநடத்த ஒரு 93 வயதான அரசியல்வாதி வேண்டும் என்பது எதிரணி மனச் சோர்வுவடைந்த நிலையில் இருப்பதைக் காட்டுகிறது என்று நஜிப் கூறியதாக பெர்னாமா மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
மலேசியாவின் முன்னேற்றத்திற்கு அரசியில் நிலைத்தன்மை முன்தேவையாகும் என்று சபாவில் பேசிய நஜிப் கூறினார்.
ஆகையால், பிஎன் அரசாங்கம் உருவாக்கியுள்ள அரசியல் நிலைத்தன்மையை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அவர் கூறினார்.