அதிகமான தேசிய மாதிரி சீனப்பள்ளிகள் (எஸ்ஜேகேசி) கட்டுவதற்கான அவசரத் தேவை இல்லை என்று கல்வி அமைச்சர் மாட்ஸிர் காலிட் கூறினார்.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் புதியப் பள்ளிகள் கட்டுவது உள்ளூர் மக்கள் கூட்டத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ஒரு புதியப் பள்ளியைக் கட்டுவதற்கு நாம் முதலில் அதன் தேவையைப் பார்க்க வேண்டும். அந்த இடம் துடிப்பான மேம்பாட்டையும் பொருளாதார நடவடிக்கைகளையும் அதிகமான மக்கள் அங்கு வாழ்வதையும் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நாம் புதியப் பள்ளியைக் கட்டலாம் என்றாரவர்.
ஒரு பள்ளியில் 3,000 மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அதில் இடமளிக்க முடியாது என்றால், ஒரு புதியப் பள்ளி கட்டுவது பொருத்தமானதாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.
அரசாங்கம் 10 புதியப் பள்ளிகள் கட்டுவதற்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சீனப்பள்ளிகளின் அமைப்பான டோங் ஸோங் அரசாங்கம் இன்னும் 34 எஸ்ஜேகேசிகளைக் கட்ட வேண்டும் என்று வற்புறுத்தியிருந்தது மீது கருத்துரைத்த அமைச்சர் இவ்வாறு கூறினார்.
முதலில் இந்தப் பத்து பள்ளிகளைக் கட்டுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும். எனினும். எந்தத் தரப்பினரும் புதியப் பள்ளிகள் கட்ட வேண்டும் என்று விடுக்கும் கோரிக்கை நாங்கள் நிராகரிப்பதில்லை. எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
அவசரம் இல்லை என்று தான் சொன்னோம்; அவசியம் இல்லை என்று சொல்லவில்லை!