இந்தியர்களை அரசாங்கம் புறக்கணிப்பதில்லை, தெங்கு அட்னான் கூறுகிறார்

 

 

கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள இந்தியச் சமுகத்தை அரசாங்கம் புறக்கணித்தே இல்லை, ஏனென்றால் அது நகர்புற மக்களின் நல்வாழ்வை உறுதிசெய்வதற்கு பொறுப்பேற்றுள்ளது.

இந்தியர்கள் கோலாலம்பூர், புத்ரா ஜெயா மற்றும் லாபுவான் ஆகிய இடங்களிலுள்ள தங்களின் வாங்கும் சக்திக்குட்பட்ட வீடுகளையும் அவர்களுக்கான சிறப்பு வீட்டு கடன்களையும் பறித்துக்கொள்ள வேண்டும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் கூறினார்.

ரூமாவிப் வீடுகளை வாங்க விரும்பும் இந்தியர்களுக்கு கடன் கொடுப்பதற்கு அரசாங்கம் கூட்டரசுப் பிரதேச அறவாரியத்திற்கு ரிம50 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று அவர் கூறினார்.

ரூமாவிப் மற்றும் பிபிஆர் போன்ற செயல்திட்டங்களில் இந்தியர்களுக்கு பங்கு வீதம் இருக்கிறது என்று வங்சா பெர்தானா அறவாரியத்தில் இன்று (28/1) பொங்கல் கொண்டாட்டம் 2018 தொடக்க நிகழ்ச்சியில் தெங்கு அட்னான் கூறினார்.

இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஏனெனில் மற்ற கட்சிகளைவிட பிஎன் மலேசியர்களின் நல்வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறை கொண்டுள்ளது என்றாரவர்.

“எதிரணியினர் சொன்னதைச் செய்யும் பிஎன் போலல்லாமல் வாய்ப்பந்தல் போடுவதில் வல்லவர்கள். இன்றைய நிகழ்ச்சியின் ஒற்றுமை பொதுத் தேர்தல் வரையில் நிலைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன். கடவுள் கிருபையால், வங்சா மாஜு பிஎன்னுக்கு சொந்தமாக இருக்கும்”, என்று தெங்கு அட்னான் நம்பிக்கை தெரிவித்தார்.