இந்திரா காந்தி அவரின் பிள்ளைகள் ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து அவரின் முன்னாள் கணவர் ரித்வான் அப்துல்லாவுக்கு எதிராக தொடுத்திருந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்திரா காந்திக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. முஸ்லிம்- அல்லாத பிள்ளைகளை முஸ்லிம்களாக மதமாற்ற பெற்றோர் இருவரின் சம்மதம் தேவை என்று அது கூறியது.
அரசமைப்பு, பகுதி 12(4)இல் வரும் “பெற்றோர்” என்ற சொல் ஒரு பன்மைச் சொல் என்றும் அது தீர்ப்பளித்தது.
எனவே, ஒரு குழந்தையை மதம் மாற்றுவதற்குப் பெற்றோர் இருவரின் சம்மதமும் தேவை என்று கூறிய உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது.
இது, 2007-இல் ஆர். சுபாஷினி vs டி.சரவணன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பிலிருந்து மாறுபடுகிறது. அந்த வழக்கில் முஸ்லிமாக மதம் மாறிய கணவர் தன் சம்மதமின்றி பிள்ளைகளை மதமாற்றிய விவகாரத்துக்குத் தீர்வுகாண விரும்பும் ஒரு இந்து மனைவி ஷியாரியா நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும் என்று கூறப்பட்டது.
இது ஒருமித்த தீர்ப்பு என்று நீதிபதிகள் குழுவுக்குத் தலைமையேற்ற நீதிபதி சுல்கிப்ளி அஹமட் மகினுடின் கூறினார். ஒருதலைப்பட்ச மதமாற்றம் ஒரு சர்ச்சைக்குரிய விவகாரம் என்றாலும் தீர்ப்பளிப்பதற்கு சமய நம்பிக்கைகள் குறுக்கே நிற்கவில்லை என்றாரவர்.
எங்க போச்சு இந்த மானங்கெட்ட மா இ கா ? 9 வருஷமா ஒரு பாலர் பள்ளி ஆசிரியை , தனியாக போராடி , இவ்வளவு பெரிய அரசியல் சட்டத்தை , PARENT என்பது இருவருமே ; ஒருவர் அல்ல என்று கூற வைத்திருக்கிறார்; அதுவும் எதிர் கட்சி தலைவர் திரு குலா அவர்களை கொண்டு ! ஒரு சிறும்பான்னமை இனத்தின் தாயாரின் கஷ்டம் தெரியுமா இந்த மானங்கெட்ட மா இ கா வுக்கு ? நாளைக்கே வெக்கம் இல்லாம அறிக்கை விடுவாய்ங்க …. “நாங்க தான் பிரதமர் கிட்ட பேசினோம் ” னு.
சகோதரி இந்திராவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !! நீதி நிலைநாட்டப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது, எண்ணம் போல் சகோதரி தன் இளைய மகளுடன் சேர வேண்டும். நீதிமான்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.
மானங்கெட்ட மா.இ.கா மக்களுக்கு எதுவுமே செய்யாது, வெறும் வீண்பேச்சுதான். சில காலங்களுக்கு முன் நம் முகநூலில் ஒரு ம.இ.கா மகளிர் தலைவி, ஸ்டேட்டஸ்களுக்கு பஞ்சமே இருக்காது, இங்கே உதவினேன், அங்கே உதவினேன் என்று, அச்சமயம் தன் வீட்டில் அத்துமீறி நுழைந்து தகாத முறையில் நடந்த ஆடவனை ஒரு இந்திய சகோதரி தாக்கி எமலோகம் அனுப்பிய செய்தி பரபரப்பாய் ஊடகங்களை நிறைத்தது, தன் தற்காப்புக்காக தன் வீட்டில் அத்துமீறி நுழைந்தவனை கொன்ற அந்த பெண்ணுக்கு இரண்டாண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டது மனதை உறுத்தியது, அந்த மகளிர் தலைவியை தொடர்புகொண்டு அந்தப் பெண்ணுக்காக போராடுவோம் என்று கேட்டதற்கு தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என பின்வாங்கி பிறகு நமது நட்பிலிருந்தே விலகிப்போய்விட்டாள், இப்படித்தான் இருக்கிறது நமது மா.இ.கா மக்களுக்கு ஆற்றும் சேவைகளின் இலட்சனம் 🙁
மானமிருந்தால்தானே கெடுவதற்கு; அது இல்லாதப் பட்சத்தில் நாம் தேவையில்லாமல் இந்த நல்லவர்களைக் குற்றம் சாட்டக் கூடாது; ஒரு உதாரணம் சொல்லுகின்றேன் கேளுங்கள்! நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் தேசத் தந்தை துங்கு அவர்களின் தலைமையில் மூன்றுக் கட்சிகள் கொண்ட அமைச்சரவையில் இரண்டு ம இ க அமைச்சர்கள். அன்று இந்த அமைச்சரவையில் மொத்தம் 11 அமைச்சர்கள் மட்டுமே. இப்போதுப் பாருங்கள் 35 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையில் ஒரேயொரு அமைச்சர் மட்டுமே. நாளை இதுவும் கூட இல்லாமல் போகலாம். அப்போது நம் மானம் இன்னும் உயரும்!
நீதி சாகாது என்பதற்கு நல்ல உதாரணம் ! ஆனால் அந்த நீதியை நிலை நிறுத்த நாம் தான் போராட வேண்டும் என்பதை நம் ஆட்சியாளர்களுக்கும் நம் மக்களுக்கும் தன் உறுதியான போராட்டத்துடன் நிரூபித்த இரும்பு பெண்மணி இந்திராகாந்திக்கு மனமுவர்ந்த பாராட்டுக்கள் ! மானம் இழந்து பதவிக்கும் !பணத்திற்கும் நாய் போல் ( நாய் மன்னிக்கவும் ) நாக்கை தொங்க போட்டுகொண்டு எவனை காக்க பிடிக்கலாம் ! எவன் காலில் விழலாம் என்று அழைந்து திரிந்து கொண்டிருக்கும் ! எங்கள் கள்வர் கூட்டத்தை எழ வம்புக்குஇழுக்கிறீங்க ! இந்த சமுதாயத்தில் என்ன நடந்தாலும் ! எந்த சமுதாயத்திற்கு என்ன இழுக்கு வந்தாலும் நாங்கள் எதாவது கண்டுகொள்கிறோமா ! நாலு காசுபார்க்க வேண்டும் ! பதவியில் இருந்து கொண்டு புட்டி யோடும் குட்டி யோடும் குதூகலமாக இருக்கவேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு அரசியல் நடத்தும் எங்களிடம் தமாசு பண்ண கூடாது ! பொது தேர்தல் நெருங்குது நம்ம சுப்பிரமணி சுவாமியும் ! நஜீப்பு சாமியும் ! எங்க எவனுக்கு எழிதி வச்சிருக்கோ ! அவர்கள் காலில் விழவே எங்களுக்கு நேரமில்லை ! ஆமாம் இந்திராணிக்கு என்ன பிரச்னை ! அறிக்கை விட சொல்லுங்கள் அடுத்த செயற்குழு கூட்டத்தில் தலைவருக்கு ஞாபக படுத்துகிறோம் ! நாங்கள் குரங்குகள் ! நல்லதை பார்க்க மாடோம் ! நல்லதை கேக்க மாடோம் ! நல்லதை பேச மாடோம் !
35 அமைச்சர்கள் கூட்டத்தில் 30 அமைச்சர்கள் நம்மளவனாக இருந்தாலும் இந்த சமுதாயத்திற்கு எவனும் ஏதும் செய்யமாட்டான் ! அந்த சுப்பிரமணி அந்த நாளில் முழு அமைச்சராக கூடாது என்று வேலு சதிசெய்தான் ! இந்த சுப்பிரமணி முழு அமைச்சராக இருந்த வேலு ஒழிய வேண்டும் என்று சாதி செய்தான் ! கூட்டி கழிச்சி பாத்த எல்லாம் சரியா வரும் ! நாமெல்லாம் ” வாடகை வீட்டிற்கு உரிமைக்கு அடித்து கொள்ளும் அண்ணன் தம்பிகள் ” ஒற்றுமை என்றால் என்ன வென்று நமது தலைவர்களிடம் கத்து கொள்ள வேண்டும் !!