பள்ளி ஆசிரியை ஒருவரின் கைத்தொலைப்பேசியைத் திருடி விட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 13-வயது மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மீது கல்வி அமைச்சு விசரணை நடத்தி வருகிறது எனத் துணை அமைச்சர் பி.கமலநாதன் கூறினார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியை மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார் என்பதையும் அவர் தெரிவித்தார்.
“கல்வி அமைச்சும் அதை விசாரித்து வருகிறது. நடந்ததைத் தீர விசாரிப்போம்.
“போலீசும் விசாரணை செய்கிறது. அவர்களின் விசாரணையில் அமைச்சு ஒத்துழைக்கும்.
“சம்பந்தப்பட்ட ஆசிரியை மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார். விசாரணை முடியும்வரை அங்கு இருப்பார்”, என மலேசியாகினிக்கு அனுப்பி குறுஞ்செய்தியில் கமலநாதன் கூறினார்.
தாமும் பினாங்கு கல்வித்துறை அதிகாரிகளும் மாணவியின் பெற்றோரைச் சந்தித்துப் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் இடமாற்றம் கல்வி அலுவளகத்தில் அதைவிட கமலநாதன் அலுவளகத்தில் இடகொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
pothuvaaga