ஐஜிபி, இனிமேலும் சாக்குப்போக்கு வேண்டாம், எனது முன்னாள் கணவரை கைது செய்யுங்கள், இந்திரா காந்தி கூறுகிறார்

 

தன்னுடைய மூன்று குழந்தைகள் ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதை முடிவிற்கு கொண்டுவர கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்திரா காந்தி போராடினார். இன்று, பெடரல் நீதிமன்றம் அவருக்கு வெற்றித் தீர்ப்பை வழங்கியது.

இப்போது, எனக்கு வேண்டியதெல்லாம் எனது இளைய மகள் பிரசனா டிக்சாவை கட்டி அணைத்து முத்தமிட வேண்டும். இப்போது 11 வயதாகி விட்ட பிரசனாவைப் பார்த்து ஒன்பது வருடங்களாகி விட்டன என்று பாலர்பள்ளி ஆசிரியரான இந்திரா காந்தி உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமக்காக வாதாடிய வழக்குரைஞர்கள் மற்றும் வரலாற்றுப்பூர்வமான தீர்ப்பை இன்று அளித்த நீதிபதிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த இந்திரா, 43. போலீஸ் படைத் தலைவர் முகமட் ஃப்பூஸி ஹருண் தமது முன்னாள் கணவர் கே. பத்மநாதன் @ முகமட் ரித்துவான் அப்துல்லாவை கண்டுபிடித்து 2009 ஆண்டில் தனது 11 மாதமேயான குழந்தை பிரசனா டிக்சாவைக் கடத்தி சென்றதற்காக கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

செய்தியாளர் கூட்டத்தில் இருந்த இந்திராவின் தாயார் எஸ். வெங்கம்மா போலீஸ் தலைவர் கொடுக்க ஒரு செய்தியை வெளியிட்டார்.

“இப்போது ஐஜிபிக்கு சாக்குப்போக்கு ஏதும் கிடையாது. அவர் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். அவர் இப்போது தொடங்க வேண்டும் ( ரித்துவானைத் தேடிக்கண்டு பிடித்து அவரைக் கைது செய்வதை), என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 2016 இல், நீதிமன்றத்திற்கு வரத்தவறியதற்காக ரித்துவானை கைது செய்யும்படி போலீசுக்கு பெடரல் நீதிமன்றம் உத்தவிட்டதோடு கைது ஆணையும் பிறப்பித்தது.

அன்றைய ஐஜிபி காலிட் அபு பாகார், போலீஸ் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப நடந்துகொள்ளும் என்று கூறினார். ஆனால், இன்றுவரையில் கைது செய்யப்படவில்லை.

இதனிடையே, போலீஸ் ரித்துவானை தேடும் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று ஐஜிபி ஃபூஸி தெரிவித்ததாக மலேய் மெயில் ஓன்லைன் செய்தி கூறுகிறது.

மகள் (பிரசனா) மற்றும் முன்னாள் கணவர் ஆகியோரை கண்டுபிடிக்க தாம் உத்தரவிடப் போவதாக ஐஜிபி தெரிவித்தாக அச்செய்தி மேலும் கூறுகிறது.