நஜிப் தற்காப்பு விவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும், நீதிபதி உத்தரவு

 

இண்டர்நேசனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மென்ட் கம்பனியுடனான (ஐபிஐசி) 1எம்டியின் உடன்படிக்கை சம்பந்தமாக பக்கத்தான் ஹரப்பான் இளைஞர் பிரிவு தொடுத்திருக்கும் வழக்கில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் பிரதமர் நஜிப் ரசாக், 1எம்டிபி மற்றும் அரசாங்கம் ஆகியவை அவற்றின் தற்காப்பு விவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று இன்று உத்தரவிட்டது.

தங்களுடைய தற்காப்பு விவாதம் தாக்கல் செய்வதற்கு தடை கோரி பிரதிவாதிகள் செய்திருந்த மனுவை நீதிபதி ஹூ சியு கெங் நிராகரித்ததைத் தொடர்ந்து மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இம்மாதத் தொடக்கத்தில், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய பிரதிவாதிகள் செய்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

பிரதிவாதிகள் அவர்களுடைய தற்காப்பு வாதத்தை பெப்ரவரி 9 க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி ஹூ உத்தரவிட்டார். இந்த முடிவு இன்று நீதிபதியின் அறையில் எடுக்கப்பட்டது.