இந்திரா காந்திக்கு அளித்த தீர்ப்பு பெருந்திறமைமிக்க தீர்ப்பு என்கிறார் ஶ்ரீராம்

இந்திரா காந்தியின் ஒருதலைப்பட்சமான மதமாற்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு மிகச் சிறந்த தீர்ப்பு என்று முன்னாள் பெடரல் நீதிமன்ற நீதிபதி கோபால் ஶ்ரீராம் வரவேற்றார்.

“இப்போது அது அனைத்து அரசமைப்புச் சட்டம் சார்ந்த வழக்குகளுக்கும் இறுதி ஆதாரமாக அமைந்துள்ளது. நமது அரசமைப்புச் சட்டத்தில் அது ஒரு திருப்பு முனை நிகழ்ச்சி”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

சட்டம் பாரபட்சமற்றது என்பதை நினைவுறுத்திய மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி ஸுல்கெப்லி அஹமட் மக்கினுடினை, ஶ்ரீராம் பாராட்டினார்.

முன்னாள் சூப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி முகமட் சுபியான் ஹசிம் இதை நீண்ட காலத்திற்கு முன்பே கூறியுள்ளார். காலப்போக்கில், சிலர் அந்த விவேகமான வார்த்தைகளை மறந்து விட்டனர் என்றாரவர்.

சம்பந்தப்பட்ட அனைவரும் நீதிமன்றம் சார்ந்த சுதந்திரம் என்பதின் பொருளை புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறிய ஶ்ரீராம், நீதிபதி ஸுல்கெப்லியின் (படம்) நினைவுறுத்தல் காலத்திற்குப் பொருத்தமானது என்றார்.