அலிரான் ஆர்வலர் போலிசாரால் கைதுசெய்யப்பட்டார்

அலிரான் கெசெடாரான் நெகாரா –வின் (அலிரான்) ஆர்வலர் சராஜுன் ஹோடா அப்துல் ஹசான் சற்றுமுன் கைது செய்யப்பட்டார்.

புக்கிட் அமான் போலிசாரால் கைதுசெய்யப்பட்ட அவர், டாங் வாங்கி மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

“அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் குற்றவியல் பிரிவு 298 மற்றும் தொடர்புத்துறை, பல்லூடகச் சட்டப் பிரிவு 233 கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது,” என ஓர் அறிக்கையில் அலிரான் கூறியுள்ளது.

“அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை விளக்க வேண்டுமென்றும்; வழக்குரைஞர் அவரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டுமென்றும் அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொண்டோம்.

“அவருக்குத் தேவையான மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்,” என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றவியல் பிரிவு 298, ஒருவரின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும்; தகவல்தொடர்பு, பல்லூடக சட்டத்தின் பிரிவு 233, பிணைய வசதிகள் அல்லது சேவையைத் தவறாகப் பயன்படுத்துவதையும் குறிக்கிறது.