செந்தமிழ்ச் செல்வியின் வழக்கை தள்ளுபடி செய்வதில் நஜிப் தோல்வியுற்றார்

 

காலஞ்சென்ற பிஐ பாலாவின் துணைவியார் செந்தமிழ்ச் செல்வி பிரதமர் நஜிப் மற்றும் அவரது துணைவியார் ஆகியோருக்கு எதிராகத் தொடந்திருக்கும் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இம்முடிவை அவரது அறையில் எடுத்த நீதிபதி ஹு சியு கெங் இவ்வழக்கிற்கான செலவாக ஒவ்வொருவரும் ரிம2,000 கொடுக்க நஜிப், ரோஸ்மா மற்றும் இதர ஆறு பிரதிவாதிகளுக்கும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் இதர பிரதிவாதிகள் நஜிப்பின் இளைய சகோதரரர்கள் அஹமட் ஜொகாரி மற்றும் நாஸிம், வழக்குரைஞர்கள் சிசில் ஆப்ரஹாம், சுனில் ஆப்ரஹாம் மற்றும் எம். அருளாம்பலம் மற்றும் சத்தியப் பிரமாண ஆணையர் ஸைனால் அபிடின் முஹாயாட் ஆகியோராவர்.