புத்ரா ஜெயா பசார் மாலத்தில் மகாதிருக்கு வரவேற்பு

 

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் அரசாங்கத்திற்கு எதிரியாக இருக்கலாம், ஆனால் அவர் நாட்டின் தலைநகரான புத்ரா ஜெயாவில் இன்னும் பிரசித்தி பெற்றவராகவே இருக்கிறார்.

பிரிசிங்ட் 2 இன் இரவுச் சந்தையில் வியாபாரிகளும் வருகையாளர்களும் ஒருவர்பின் ஒருவராக மகாதிரின் கையைக் குலுக்கியதோடு அவருடன் செல்பியும் எடுத்திக்கொண்டனர். அவர் இன்றிரவு அச்சந்தையைச் சுற்றி உலா வந்தார்.

மகாதிரின் சிந்தனையில் உருவாகிய புத்ரா ஜெயா அவர் எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடிய மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார்.

புத்ரா ஜெயாவில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் அரசு ஊழியர்களும் அவர்களுடைய குடும்பத்தினருமாவர். அவர்கள் பிஎன் அரசாங்கத்தைச் சார்ந்திருப்பது அவர்களது பாரம்பரியம்.

அங்கு காணப்பட்டவர்களில் பலர் அமைச்சர் அலுவலக அடையாள அட்டைகளை அணிந்திருந்தனர். மருத்துவமனை நர்ஸ் ஒருவர் மகாதிருடன் செல்பி எடுத்துக்கொள்ளத் தயங்கவில்லை.

அந்த இரவுச் சந்தையில் அவர் உலா வருகையில், பரபரப்புற்ற ஒரு மாது “Hidup PM baru” (நமது புதிய பிஎம் நீடூழி வாழ்க) என்று குரல் எழுப்பினார்.

ஒரு மீன் வியாபாரி குறும்பாக தாம் விற்கும் மீன்கள் செகின்சானிலிருந்து வந்தவை, ஆனால் ஜமாலுடையதல்ல என்று கூறினார்.

இறுதியில், மகாதிர் பொரிப்பதற்காக மீன் வாங்கினார்.

புத்ரா ஜெயா தவிர, லங்காவி மற்றும் அவரது முன்னாள் நாடாளுமன்ற தொகுதியான குபாங் பாசு ஆகியவற்றிலும் போட்டியிடுவது குறித்து மகாதிர் சிந்தித்து வருகிறார்.