பாஸ் கிளந்தான் அமனா போன்ற கட்சிகளைச் சாதாரணமாக எண்ணி விடலாகாது என்று பாஸ் உதவித் தலைவர் முகம்மட் அமார் நிக் அப்துல்லா எச்சரித்தார்.
“பக்கத்தான் ஹரபான் உறுப்புக் கட்சிகளான அமனா, பெர்சத்து போன்றவை பலம்குறைந்த கட்சிகளாக தோன்றலாம். ஆனால், எதிரிகளைக் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது”, என கிளந்தான் துணை மந்திரி புசாருமான முகம்மட் அமார் கூறினார்.
அதற்கு “ஆமையும் முயலும்” கதை ஓர் எடுத்துக்காட்டு என்றார்.
“முயல் மெதுவாக ஓடி போட்டியில் தோற்றுப்போகவில்லை. ஆமையால்தான் வேகமாக செல்ல முடியாதே என்று நினைத்த முயல் ரொட்டி செனாய் சாப்பிட்டு விட்டு சிகரெட் புகைத்துவிட்டு அப்படியே தூங்கிவிட்டது.
“கதை உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால், உன் எதிரியைக் குறைத்து மதிப்பிடாதே என்று அருமையான பாடத்தைக் கற்றுத் தருகிறது”, என்றவர் நேற்று கோத்தா பாருவில் கூறினார்.