மாபுஸ்: வாக்காளர்களே, தொங்கு நாடாளுமன்றத்தின் வழி பாஸை முடிவெடுக்கும் மன்னராக்கி விடாதீர்

 

எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் ஒரு தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கிவிட வேண்டாம் என்று வாக்காளர்களை, குறிப்பாக பாஸ் கட்சியின் ஆதரவாளர்களை, பாஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் எச்சரித்துள்ளார்.

அவ்வாறு செய்வது நாட்டின் ஜனநாயக நடைமுறையை சேதப்படுத்திவிடும் என்றாரவர்.

பாஸ் கட்சி 40 நாடாளுமன்ற இருக்கைகளைக் கைப்பற்றி விட்டால், மற்ற கட்சிகள் பாஸின் உதவியின்றி அடுத்த அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹஆடி அவாங் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாஸ் கட்சியிலிருந்து வெளியேறிவிட்ட மாபுஸ், தொங்கு நாடாளுமன்றம் ஏற்படலாம் என்று நம்புகிறவர்கள் பாஸ் கட்சியின் வலிமையில் இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் என்றாரவர்.

பாஸ் கட்சிக்கு வாக்களித்து அக்கட்சியை தொங்கு நாடாளுமன்ற சூழ்நிலையில் முடிவெடுக்கும் ஒரு சக்தியாக விளங்க அனுமதிப்பவர்கள் தேர்தலுக்குப் பின்னர் அரசியலில் நிலையற்றதன்மையை அனுமதித்ததற்காக குறை கூறப்படுவார்கள் என்று போகோக் செனா நாடாளுமன்ற உறுப்பினரான மாபுஸ் கெடாவில் சந்தித்த போது கூறினார்.