அம்னோ/பாரிசான் ஆதரவு இருந்ததால்தான் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் லங்காவியை மேம்படுத்த முடிந்தது.
அத்தீவின் மேம்பாட்டுக்கு டாக்டர் மகாதிர்தான் காரணம் என்று கூறப்பட்டாலும் அவரைப் பிரதமராக்கிய கட்சியின் ஆதரவின்றி அவரால் அதைச் சாதித்திருக்க முடியாது என பிஎன் இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் கூறினார்.
“பிஎன் ஆட்சியில் இல்லையென்றால் லங்காவியே உருவாகி இருக்காது”, என நேற்றிரவு லங்காவி இளைஞர்களுடான கலந்துரையாடலில் கைரி கூறினார்.
லங்காவி மக்கள் மகாதிர் ஆட்சி செய்த காலத்தை இன்னும் நினைவில் வைத்திருப்பதை உணர்ந்த அவர், மக்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார்.
“மகாதிரை மறக்கவில்லை, அவருக்கு நன்றி கூறுவோம் ஆனால், அடுத்த 10இலிருந்து 30 ஆண்டுகளுக்கு எந்தக் கட்சித்தலைவர்கள் மக்களுக்கு முன்னேற்றத்தைக் கொண்டுவரக்கூடியவர்களோ அவர்களைதான் நாம் ஆதரிக்க வேண்டும்”, என்றாரவர்.