வெறுப்பு உணர்வுகளையும் உறுதியாகத் தெரியாத விஷயங்களையும் தேவாலயங்களில் பரப்ப வேண்டாம் என, கோலாலம்பூர் கிறிஸ்துவ மக்களுக்கு தெங்கு அட்னான் நினைவு படுத்தினார்.
இன்று தித்தி வங்சாவில் நடைபெற்ற, 1கூட்டரசுப் பிரதேசம் விருந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தேவாலயங்களில் கிறிஸ்துவ மதம் சார்ந்த போதனைகளை மட்டும் போதிக்கும் படி கேட்டுக்கொண்டார்.
“எனவே, இல்லாததை எல்லாம் பேசாதீர்கள். எனக்குப் புரியவில்லை, தித்திவங்சாவில் இருக்கும் என் நண்பர்கள் தயவுசெய்து கவனமாக இருங்கள், ஏனென்றால் அவர்கள் பல்வேறு வழிகளைப் பயன்படுத்துகிறார்கள்.
“நான் கிறிஸ்துவ நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன், உண்மை இல்லா விஷயங்களைப் பேச தேவாலயத்தைப் பயன்படுத்த வேண்டாம், நீங்கள் இணையத்தில் வாசிப்பது அல்லது உங்களிடம் வரும் தகவல்கள் எதையும் நீங்கள் தேவாலயத்தில் சொல்ல வேண்டியதில்லை.
“கடவுளின் சித்தாந்ததைப் பரப்பும் ஓர் இடமாக அதைப் பயன்படுத்துங்கள், உங்கள் சொந்த விருப்பத்தையோ அல்லது விரும்பாத விஷயங்களையோப் பரப்பி, சர்ச்சை ஏற்படுத்த வேண்டாம்,” என்று அவர் கூறினார்.
அதோடு மட்டுமின்றி, தங்களுக்குப் புரியாத விஷயங்களை அரசாங்கத்திடம் கேட்டு, தெளிவுபடுத்திக் கொள்ளும்படியும் அவர் தேவாலயச் சமூகத்தை வலியுறுத்தினார்.