சிலாங்கூர் பிகேஆர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அது போட்டியிட உத்தேசிக்கும் சில தொகுதிகளை அதன் பங்காளிக்கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க ஆயத்தமாகவுள்ளது.
ஆனால், அவை அத் தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என சிலாங்கூர் பிகேஆர் மகளிர் தலைவர் ஹனிசா முகம்மட் தல்ஹா கூறினார்.
“அவை கோரிக்கை விடுக்கும் இடங்களில் வெற்றிபெற முடியும் என்பதை நிரூபித்தால் அவற்றை விட்டுக்கொடுப்பதில் எங்களுக்குத் தயக்கமில்லை”, என ஹனிசா இன்று பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் கூறினார்.
பிகேஆர் கடந்த பொதுத் தேர்தலில் அது போட்டியிட்ட 21 இடங்களிலும் போட்டியிட எண்ணியிருப்பதாக இதற்குமுன் அறிவிக்கப்பட்டிருந்தது. 21 இடங்களில் போட்டியிட்ட அது 14 இடங்களில் வென்றது.
“நாங்கள் நடத்திய ஆய்வுகளில் அத் தொகுதிகளில் பிகேஆர் வெல்வதற்கே அதிக வாய்ய்ப்புகள் இருப்பது தெரியவந்தது”, என்றாரவர்.