பங்குகளில் முதலீடு செய்ய, ஏழை இந்தியர்களிடம் பணம் இல்லை.
எனவே, பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி) – அமானா சாஹாம் 1 மலேசியா (அ.ச.1ம.) திட்டம், ஏழை இந்தியர்களுக்கு எவ்வாறு பலனைத் தரும் என, சுங்கை சிப்புட் எம்.பி. டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ் கேள்வி எழுப்பினார்.
அத்தகைய முதலீட்டுத் திட்டங்கள், நடுத்தர மற்றும் உயர் வருமானம் பெறும் குடிமக்களுக்கு மட்டுமே உதவும் என பி.எஸ்.எம். நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு, அதற்குப் பதிலாக மற்ற வடிவங்களில் உதவி திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்றார் ஜெயக்குமார்.
“அரசாங்கம் உண்மையில் இந்தியர்களுக்கு உதவ விரும்புகிறது என்றால், அவர்கள் சொந்த வீடுகளைப் பெறுவதற்கு உதவ வேண்டும்,” என்று ஃப்.எம்.தி.-இடம் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்தாண்டு அக்டோபர் 27-ஆம் தேதி, பிரதமர் நஜிப் ரசாக் 2018-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், அ.ச.1ம. பங்கு முதலீடு பற்றி அறிவித்ததை, ஜெயக்குமார் ‘மறந்துவிட்டார்’ என ம.இ.கா. பொருளாளர் எஸ். வேல்பாரி அவரை விமர்சித்து இருந்தார்.
பிஎன்பி, இந்தியர்களுக்குக் கூடுதலாக 1.5 பில்லியன் அ.ச.1ம. பங்குகளை விநியோகிக்கும், ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் 30,000 பங்குகள் வரை வழங்கப்படும் என்று நஜிப் கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி, அத்திட்டத்தில் முதலீடு செய்ய, பி40 (குடும்ப வருமானம் 40% கீழ்) பிரிவைச் சேர்ந்த 100,000 இந்தியக் குடும்பங்களுக்கு உதவி செய்ய, RM500 மில்லியன் கடன் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
வேல்பாரி அத்திட்டத்தை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று ஜெயக்குமார் கூறினார், அ.ச.1ம. பங்குகள், ஏழைகள் மத்தியில் வறுமையை ஒழிக்க பயன்படாது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன, இது வெறும் ‘தேர்தல் கண்துடைப்பு’ என்று டாக்டர் ஜெயக்குமார் மேலும் கூறினார்.
வறுமையை ஒழிக்க பங்குகள் உதவாது
“அனைவருக்கும் தெரியும், இதற்கு முன்னமே இத்திட்டத்தை அரசாங்கம் மலாய்க்காரர்களிடம் அறிமுகம் செய்திருந்தது, ஆனால், மலாய்க்காரர்கள் மத்தியில் வறுமை இன்னும் ஒழிக்க முடியவில்லை. ஆக, வேலைக்காகாது என்று நிரூபிக்கப்பட்ட ஒரு திட்டத்தை ஏன் மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும்?”
கஷானா ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சி இயக்குநர், முஹமட் அப்துல் காலிட், பல்வேறு சமூக – பொருளாதார வகுப்புகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுக்குப் பங்களித்த இதுபோன்ற திட்டங்களின் புள்ளிவிவரங்களை ‘கலர் ஓஃப் இன்ஈகுவாலிட்டி’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அப்புத்தகத்தில், 6.5 மில்லியன் மலாய் முதலீட்டாளர்களைக் கொண்டுள்ள, அமானா சஹாம் பூமிபுத்ரா (எ.எஸ்.பி) திட்டத்தில், 72% கீழ்நிலை முதலீட்டாளர்கள் சராசரியாக ரிம 554 மட்டுமே வைத்திருந்தனர். மேல்மட்ட முதலீட்டாளர்களில் 28 விழுக்காட்டினர் ரிம 53,582 மற்றும் 0.2 விழுக்காட்டினர் ரிம 725,522 வைத்திருந்ததாகவும் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.
“ஆக, வறுமையிலிருக்கும் மக்களை உயர்த்துவதற்கு பங்குகள் உதவாது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.
“எ.எஸ்.பி.-யின் நிலை இதுவென்றால், நீங்கள் அ.ச.1ம.-வை எப்படி நியாயப்படுத்தப் போகிறீர்கள்?”
ஏழைகளின் வீட்டுப் பிரச்சனையைத் தீர்ப்பது மிக முக்கியம்
ஏழை மக்களின் வீட்டுப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பது மிகவும் முக்கியம் என்று ஜெயக்குமார் கூறினார். சுங்கை சிப்புட்டில் கடந்த 60 முதல் 70 ஆண்டுகளாக, அரசாங்க நிலத்தில் தங்கியிருந்த மக்கள், புறம்போக்குவாசிகள் என்று ஒதுக்கப்பட்டுவிட்டனர் என்றார் அவர்.
“சிந்தித்துப் பாருங்கள், அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலத்திற்கு நிலப்பட்டா கொடுத்தால், அவர்கள் தங்களுடைய தற்போதைய வீடுகளிலேயே நிரந்தரமாகத் தங்கி, இருக்கும் பணத்தைத் தங்களை மேம்படுத்தி கொள்ளப் பயன்படுத்துவார்கள்.
“இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல, புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் இது பொருந்தும். நமது மக்கள் தொகையில் 20 விழுக்காட்டினருக்கு இது மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும்,” என்று மலேசிய சோசலிசக் கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினருமான டாக்டர் ஜெயக்குமார் கூறினார்.
உண்மை .வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் வாழும் இடங்களில் அவர்களுக்கு நிலஉரிமையை கொடுக்கலாம் அல்லது குறைந்த விலை அடுக்குமாடி வீட்டிற்கு ஒரு தொகையை அளித்து மாதம் ஐம்பதோ நூறோ அவர்கள் கட்டி அந்த வீடு அவர்களுக்கு சொந்தமாக ஆக்கும்படி செய்யலாம் .சொந்த உறைவிடம் அவர்கள் வாழ்வில் நம்பிக்கையை கொடுக்கும் .
எங்களுக்கு தானமும் வேண்டாம். பிச்சையும் வேண்டாம். எங்களுக்கு தேவை எல்லாம் எங்களது உரிமை…எங்களிடமிருந்து பறித்துக் கொண்டதை திரும்பக் கொடுங்கள். அரசுத் துறைகளில் எங்களுக்கு வேலை வாய்ப்பு, அரசாங்க பல்கலைக்கழகங்களில் எங்களுக்கு உரிய இடம், எங்களுக்கு உரிய பங்கை கொடுத்தால் போதும். நாட்டு முன்னேற்றத்தைல் எங்களின் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் இவற்றை எங்களுக்குக் கொடுத்தாலே போதும். மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
பங்குகளும் நமக்கு உதவும். வீடும் நமக்கு உதவும்.
ஆனால் நம் பங்குகளால் / பணத்தால் ‘PNB’ பெற்ற சொத்து நம் உரிமையாகாது. அச்சொத்திலிருந்து வரும் இலாப ஈவுகளே (dividend) நமக்கு உதவும் / உரிமையாகும். அதுவும் அந்த இலாப ஈவுகளை நிர்ணைக்கும் அதிகாரம் நமக்குக் கிடையாது. அவர் கொடுத்ததை வாங்கிக் கொள்ள வேண்டும்.
நமது பணத்தைக் கொண்டு “PNB” வாங்கிய சொத்து இறுதியில் அவர்களுக்கே உரிமையாகும். இதில் யார் அறிவாளி?
நம் பணத்தைக் கொண்டு மற்றவன் சொத்து வாங்கி தன் சொத்துடமையை வளர்த்துக் கொள்கிறான். நாமோ நம் சொத்துடமையை வளர்க்கத் தெரியாமல் பணத்தை வேற்றொருவரிடம் கொடுத்து ஏமாந்து வாழ்கிறோம். நல்ல வேடிக்கை.
நமக்கு அறிவிருந்தால் அந்த பணத்தை வேற்று வழியில் முதலீடு செய்து நாமும் இந்நாட்டில் சொத்துடமையை வளர்த்துக் கொள்ளலாம். இத்தகைய அறிவுரைகளைக் கூற ம.இ.க. – தலைவர்களுக்கு வக்கில்லை. இவர்களா நம்மை இந்நாட்டில் வாழ வைக்கப் போகின்றார்?
utaranam ஒருவர் ஆயிரம் ரிங்கிட் முதலீட்டின் 6% வருசத்துக்கு 60 maddumeh. இது லாபமா ??? போதுமாக ????
தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கும் வேலையில் இவர் கேட்பது வேடிக்கையாகவும் சிரிப்பாகவும் இருகிறது. பங்குகள் வேண்டாம் வீடுகள் வேண்டும் என சிறுபிள்ளைதனமாக அரசாங்கத்தை கேட்பது ஒன்றும் புரியவில்லை. ஐயா, சுங்கை சிப்புட் எம்.பி. டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ் அவர்களே, இந்த தேர்தல் நெருங்கும் சமயத்தில் உங்களை போன்ற நல்ல தலைவர்கள் அரசாங்கத்தை கேட்பது தேவை இல்லாத ஒன்று இப்பொழுது. இன்று ஆட்சி அமைக்க பல கட்சிகள் தத் தம் அறிக்கைகள் வெளியிடுகின்றன அனால் நீங்களோ அரசாங்கத்திடம் பங்குகள் வேண்டாம் வீடுகள் கொடுங்கள் என்கிறிர்கள். ஏதோ எதையாவது பேச வேண்டும் சொல்ல வேண்டும் எபதற்காக சும்மா அறிக்கைகள் விட வேண்டாம். இன்று விலைவாசிகள் அதிகம் உயர்ந்த இருக்கும் வேலையில் அது பற்றி அரசாங்கதை கேளுங்கள் தலைவர்களே. நல்ல தொழில், நல்ல சம்பளம் பெறுபவர்களுக்கு கஷ்டங்கள் தெரியது. அனால் ஒரு சராசரியான குடும்பங்களுக்கு தான் தெரியும் இன்றைய குடும்ப சுமைகள். இன்று பங்குகள் வாங்கும் அளவுக்கு சராசரி ஒரு குறைந்த வருமானம் பெரும் குடுபங்களுக்கு முடியாத காரியம். அடுத்து வீடுகள் வாங்கும் அளவுக்கும் போதுமான வருமானம் இருபது இல்லை. இப்படி இருக்க தலைவர்கள் நாட்டில் நிலவும் பல பிரச்சனைகள் தொட்டு பேசுங்கள். நன்றி