வெளிநாட்டில் உள்ள வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்களிப்பைக் கையாளும் போஸ்லாஜு ஒரு நடுநிலைத் தரப்பு என்பதால் அதில் ஒளிவுமறைவு இருக்கும் என்று ஐயப்பாடு கொள்ள வேண்டியதில்லை எனத் தேர்தல் ஆணைய(இசி)த் தலைவர் முகம்மட் ஹஷிம் அப்துல்லா கூறினார்.
“அஞ்சல் வாக்களிப்பில் பாதுகாப்பும் இரகசியமும் காக்கப்படும் என்று போஸ் மலேசியா உத்தரவாதம் கொடுத்திருக்கிறது”, என்றவர் நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அஞ்சல் வாக்களிப்பைக் கையாளும் பொறுப்பை இசி போஸ் மலேசியாவுக்குக் கொடுத்திருப்பதற்கு குளோபல் பெர்சே எதிர்ப்புத் தெரிவித்துள்ளதற்கு முகம்மட் ஹஷிம் அவ்வாறு எதிர்வினை ஆற்றினார்.
அஞ்சல் வாக்களிப்பை வெளியுறவு அமைச்சே கையாள வேண்டும் என குளோபல் பெர்சே கூறியிருந்தது.
13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எல்லா இடைத் தேர்தல்களிலும் , சரவாக் தேர்தலிலும் அஞ்சல் வாக்குகளை அனுப்ப போஸ் மலேசியாவின் சேவைகள்தான் பயன்படுத்திக் கொள்ளப்பட்டு வந்துள்ளன என்று கூறிய முகம்மட் ஹஷிம் அதில் எந்தவொரு சிக்கலும் ஏற்பட்டதில்லை என்றார்.
முடிச்சாண்டா முருகேசா ….