அண்மையில் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியமும் , டத்தோ ஸ்ரீ தேவமணியும்,மகாதீர் பிரதமராக இருந்த போது இந்தியர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்றும் அதனால்தான் இன்று இந்தியர்கள் முன்னேற்றமடையாமல் பின்தங்கியே இருக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.
மகாதீர் காலத்தில் டாக்டர் சுப்ராவும்தேவமணியும் அமைச்சரவையில் இல்லை . அப்படி இருக்கும் போது அவர்கள் எப்படி மாகதீர் இந்தியர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று திட்டவட்டமாகத் சொல்லமுடியும் ?
மகாதீர் இந்தியர்களுக்கு செய்ததுவும் செய்யாததுவும் துல்லியமாக தெரிவைத்திருப்பவர் அப்பொழுது அமைச்சரவையில் இருந்த துன் சாமிவேலுதான் ! அவர்தான் இந்தியர்களுக்கு மாகாதீர் என்ன செய்தார் என்பதனை தெளிவு படுத்த வேண்டும்.
1. மாகாதீர் பிரதமராக இருந்த காலத்தில் 10 மில்லியன் டெலிகம்ஸ் பங்குகளை ம.இ.காவிற்கு வழங்கப்பட்டது . அதன் மதிப்பு அப்பொழுது 50மில்லியன் ரிங்கிட்..
2. மகாதீர் காலத்தில்தான் டிவி 3ல் பங்குகள் இந்தியர்களுக்கென ம.இ.கா வழி கொடுக்கப்பட்டது.
3. ஏய்ம்ஸ் பல்கலைக் கழகத்திற்காக கெடா மாநிலத்திலிருந்து 200 ஏக்கர் நிலம் மாகாதீரின் உதவியுடன் பெற்றுத்தரப்பட்டது. மேலும் 20 கோடி ரிங்கிட் மகாதீர் ஏய்ம்ஸ் பல்கலைக்கழகத்திற்காக கொடுத்திருந்தார்.
4. டேப் கல்லூரிக்கும் , வாண்டோ அக்கடெமிக்கு மகாதீர் காலத்தில் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அப்பொழுது மகாதீர் கொடுத்த ஒதுக்கீடுகள் முழுதும் இந்திய சமுதாயத்திற்கு போய் சேரவில்லை என்று சாமிவேலு மீது ஒரு குற்றச்சாட்டும் எழுந்த்த. அப்பொழுது அவரை காப்பாற்றியதுவும் மகாதீர்தான் என்று சொல்லப்பட்டது.
தமிழ்ப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளெல்லாம் ஏய்ம்ஸ் பல்கலைகழக நிர்மாணிப்புக்கு திசை திருப்பப்பட்டன என்பதாகவும் சொல்லப்படுகிறது.
மகாதீருக்கு பின் துன் படாவி 6 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாரே அவர் இந்தியர்களுக்கு என்ன செய்தார் என்று டக்டர் சுப்ராவும் தேவமணியும் ஏன் கேள்வி எழுப்பவில்லை ?
படாவி பிரதமராக இருந்த போதுதான் அதிகமான கோவில்கள் இடிக்கப்பட்டன என்ற தகவலை இவர்கள் இருவரும் அறிந்துள்ளனரா?
2007 ல் 3 லட்சம் இந்தியர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ததுவும் படாவி ஆட்சியின் போது தானே?
மாகாதீர் எதிரணியுடன் சேர்ந்துவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை விமர்சனம் செய்கிறார்களா?
மாகாதீர் பிரதமராக இருந்த போது ம.இ.கா பேரவையில் ”ஹிடுப் மகாதீர் “என்று ஜால்ரா போட்டவர்கள் இவர்கள்தானே ?
தங்களுக்கு தலைவனாக இருக்கும் போது போற்றுவதுவும் , பதவி போனபின் தூற்றுவதுவும் ம.இ.க தலைவர்கள் செய்யும் வாடிக்கையான நடவடிக்கைத்தானே !
மகாதீர் இந்தியர்களுக்கென்று கொடுத்ததையெல்லாம் சாமிவேலு தலைமையில் சுயநலத்துக்காக சுருட்டப்பட்டன என்பது மட்டுமே உண்மை.
விமர்சிப்பது அவரவின் ஜனநாயக உரிமை ,ஆனால் விமர்சிகப்படும் தகவல்கள் சரியானவையா என்று சரி செய்த பின்னர் செய்தி விடுவதுவே அறிவுடமையாகும்.
வணக்கம் சார். மகாதிர் காலத்தில் இந்தியர்களுக்காக கொடுக்கப்பட்ட மாணியங்களை எல்லாம் சுருட்டிக்கிட்டு போனவங்க எப்படிங்க பதில் சொல்ல முன்வருவார்கள். சாமிவெலு சொன்ன 24 மாடி ம.இ.கா. கட்டடம் எங்க இருக்கு சொல்லுங்க. கடன் இல்லாமல் மானிக்கவாசகம் கட்டி கொடுத்த கட்டடத்தில் உட்கார்ந்து வெட்டித்தனமா பேசிக்கிட்டு இருக்காங்க வெட்கமில்லாமல்…
ஐயா குலா ! மகாதீர் என்ன என்னவெல்லம் கொடுத்தார் ! அது எங்கு போனது ! எப்படி போனது ! யாருக்கு போனது ! இந்திய சமுதாயம் அள்ளிகொடுத்த பணம் மைக்கா என்ற பெயரில் மாயமாய்ப்போனதும் உமக்கும் தெரியும் ! இந்த சமுதாயத்திற்கும் தெரியும் ! அதுதான் ஓரளவிற்கு பட்டியல் போட்டு காட்டி விட்டிரே ! காது கேளாத கிழட்டு முதலைகள் வாயில் போனதையெல்லாம் கணக்கு கேட்க்கும் உமது நகைச்சுவைதான் 2018 எந்த தமிழ் சினிமாவிலும் வராத ! மிகப்பெரிய நகைச்சுவை ! இவர்கள் எல்லாம் மகாதீர் யார் என்று கேட்டாலும் ஆச்சரிய படுவதற்கில்லை ! மகாதீர் ” மேலாயு மூட லுப்ப ” என்று அவர்களை சொன்னார் ! தமிழன் நன்றி இல்லாதவன் ! முதுகில் குத்துபவன் ! பணம் ! பதவி ! என்றால் எவனுடைய எச்சத்தையும் தின்னும் மானம் இல்லா ஜந்துக்கள் ! என்று இனியும் தெரிந்து கொள்ளட்டும் ! நாடக நடிகன் தானே தானை தலைவன் ! கேக் ஊட்டியே மகாதீர் ருக்கு ஜால்ரா போட்டே ! நாடகமாடி இந்த சமுதாயத்தை மோட்டை அடித்து தனுக்கு மயிரை நாட்டு கொண்டு வந்தவன் தானே ! நீதி ! நேர்மை ! நாயம் எல்லாம் யாரிடம் எதிர்பார்ப்பது என்ற விவஸ்தை எல்லாம் உமக்கு இல்லையா ! பொய்யா ! போய் ! வேற உருப்படற வேலை இருந்த பாரும் ஐயா குலா ! உமக்கெல்லாம் அரசியல் தெரியலே ! தில்லுமுல்லு ,அவனை தெரியும் இவனை தெரியாது இதெல்லாம் எங்கள் அரசியலில் சகஜம் அப்ப குலா சேகரா !!