கடந்த 2016-ல், பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஷி ரம்லி, தாபோங் ஹஜிக்கு எதிராக செய்த குற்றஞ்சாட்டுகளின் விளைவாக, வைப்புத்தொகையாளர்கள் தங்கள் வைப்புத்தொகைகளைத் திடீரென திரும்பப் பெறுவது அதிகரித்து வருவதாக கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தெரிவித்தது.
தாபோங் ஹஜி தலைமை நிதி அதிகாரி, ரோசாய்டா ஓமர், தனது பிரிவு தினசரி நடவடிக்கைகளில் பொறுப்பேற்றிருப்பதாகவும், வைப்புத் தொகைகள் திரும்பப் பெறப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
“அவர் (ரஃபிசி) அறிக்கை வெளியிட்ட அன்று, அதிகமான தொகைகள் திரும்பப் பெறப்பட்டன, இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, அதிகமானதாக இருந்தது,” என்று ரோசாய்டா கூறினார்.
அதனைத் தொடர்ந்து, 2016 பிப்ரவரி 18-ல், ரஃபிசியின் ‘2009 – 2015 தாபோங் ஹஜியின் நிதி பகுப்பாய்வு’ கட்டுரைக்கு எதிராக ரோசாய்டா போலிஸ் புகார் செய்தார். 2016, பிப்ரவரி 9-ல், ரஃபிசி தனது முகநூல் பக்கத்தில் அக்கட்டுரையைப் பதிவேற்றம் செய்திருந்தார்.
ரஃப்சி குற்றவியல் தண்டனை 500-வது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார். இக்குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.
இதற்கிடையில், நீதிபதி உம்ஷாருல் அன் –நூர் உமார், தனது வழக்கு விசாரணையை நிறுத்த வேண்டுமென ராஃபிசி முன்னர் செய்த கோரிக்கையை, இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
ராஃபிசியின் வழக்கறிஞர் கோபிந்த் சிங் தியோ முன்வைத்த, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 133-வது பிரிவு, இந்த வழக்குக்குப் பொருந்தாது என்றும், இது தனிப்பட்ட வழக்கு அல்ல என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.