ரபிசி சிறையிடப்பட்டதில் பிஎஸ்எம் தலைவருக்கு வருத்தம்

நேசனல்  பீட்லோட்  கார்ப்பரேஷன்  நிறுவனத்தின்  வங்கிக்  கணக்குகளைக்  கசிய  விட்டதற்காக   பாண்டான்  எம்பி  ரபிசி   ரம்லிக்கும்  பப்ளிக்   பேங்க்   அலுவலர்   ஜொஹாரி   முகம்மட்டுக்கும்  30   ஆண்டுச்  சிறைத்தண்டனை  விதிக்கப்பட்டது   ஏமாற்றமளிப்பதாக  பாரிடி  சோசியலிஸ்  மலேசியா  மத்திய  செயல்குழு  உறுப்பினர்   எஸ். அருள்செல்வன்  கூறினார்.

நேற்றிரவு    முகநூலில்   பதிவிட்ட     அவர்,    நீதிமன்றம்  ஊழலைத்  துணிச்சலுடன்  அம்பலப்படுத்தியவர்களைத்   தண்டிப்பதிலும்   அதிகாரத்துவ  இரகசியங்கள்   சட்டத்தின்  பின்னே  ஒளிந்துகொள்வோரைப்  பாதுகாப்பதிலும்    முனைப்புக்  காட்டியுள்ளது   என்றார்.

நீதிமன்றத்  தீர்ப்புக்கு   எதிர்ப்புக்  காட்டுவதில்   எதிர்கட்சிகளிடையே   ஒற்றுமை  இல்லாததும்   அருள்செல்வனுக்கு   ஏமாற்றமளிக்கிறது.

“பொதுத்  தேர்தல்   நெருங்கிவரும்  வேளையில்  மக்களும்   அலுத்துப்  போய்விட்டார்கள்.  அரசியல்வாதிகள்   தேர்தலில்   வெற்றிபெறும்  வழிகளைக்  கண்டறிவதில்தான்   நாட்டம்  காட்டுகிறார்களே  தவிர    அடக்குமுறையையும்  அத்துமீறல்களையும்   எதிர்க்க  மக்களை  வலுப்படுத்த  முற்படுவதில்லை”,  என்றாரவர்.