நேசனல் ஃபீட்லோட் கோப்பரேஷென் (என்.ஃப்.சி.) சர்ச்சையில் பாதிக்கப்பட்டது ரஃபிசி அல்ல என்று அம்னோ மகளிர் தலைவி ஷாரிசாத் ஜாலில் தெரிவித்தார்.
இன்றைய உத்துசான் மலேசியா செய்திகள் படி, ரஃபிசியின் அரசியல் நோக்கங்களுக்கான அவருடைய நடவடிக்கைகளால் விளைவுகளைச் சந்தித்தவர்களே பாதிக்கப்பட்டவர்கள் என்று ஷாரிசாத் கூறியுள்ளார்.
என்.ஃப்.சி. திட்டத்தின் தோல்விக்குக் காரணம் ரஃபிசிதான் என்று கூறிய அவர், இப்போது ரஃபிசி தனது செயல்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
தகவல் கொடுப்பவர் பாதுகாப்பு சட்டம் 2010-ஐ தவறாகப் பயன்படுத்தியதோடு, மற்றவர்களின் சட்ட உரிமைகளைப் புறக்கணித்து, அந்த விஷயத்தை ஓர் அரசியல் ஆயுதமாக அவர் உருவாக்கிவிட்டார் என்றும் ஷாரிசாத் கூறினார்.
நேற்று, செஷசன்ஸ் நீதிமன்றம், இவ்வழக்கில் ரஃபிசி குற்றவாளி என தீர்ப்பளித்து, 30 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கியது.
இது ‘அரசியல் ஆயுதம்’ என்றால் என்றோ தே.மு. அரசாங்கம் கவிழ்ந்திருக்க வேண்டும். இது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ரபீசி வெளியிட்ட தகவல். அவ்வாறு செய்வது தனக்குத் தீங்கை ஏற்படுத்துமென்று அறிந்திருந்தும் அவர் மக்கள் நலனுக்காகச் செய்தார். மலேசிய வரலாற்றிலும் மக்கள் மனதிலும் அவர் இடம் பிடித்து விட்டார். சிறந்த மலாய்க்காரர்களில் இவரும் ஒருவர்.