கடந்த சில நாள்களுக்கு முன், மலேசிய இந்து சங்கம் மற்றும் மலேசியாவில் இயங்கும் அரசு சாரா தெலுங்கர், சீக்கியர், மலையாளிகள், வங்காளிகள், சிந்தியர்கள், மராட்டியர்கள், குஜராத்திகள் சங்கங்கள் இணைந்து பிரதமர் நஜிப்புக்குக் கொடுத்த மனுவில், ஏப்ரல் 14ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் இந்துப் புத்தாண்டு அல்லது இந்து விழாவாக அறிவித்து அதற்கு பொதுவிடுமுறையை அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு ; அதனை அரசின் தேசிய நாள்காட்டியிலும் குறிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு மலேசியத் தமிழர் களம் (ம.த.க.) அமைப்பு இதர தமிழர் அமைப்புகளுடன் இணைந்து கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், ம.த.க. அமைப்பின் தேசியத் தலைமைப் பொறுப்பாளர் தமிழ்ப்புகழ் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியர்கள் என்ற கூட்டமைப்பில் உறுப்பியம் பெற்றுள்ள மேற்கண்ட இனங்களைப் பிரதிநிதித்து அவ்வினங்களைப் பிரதிநிதிக்கும் இயக்கங்களின் பொறுப்பாளர்கள் கூட்டாக அந்த மனுவில் கையொப்பமிட்டுள்ளனர். ஆனால், தமிழர்களைப் பிரதிநிதிக்கும் இயக்கங்களின் பிரதிநிதிகள் ஒருவர்கூட இதில் இடம்பெறாதது வேடிக்கையிலும் வேடிக்கையாக இருப்பதாகக் கூறினார்.
“அதனிலும் வேடிக்கை, இதுவரை தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாளா அல்லது சித்திரை முதல் நாளா என்ற வினாவுக்கு, சித்திரை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு என்று தொடர்ந்து தெரிவித்துவந்த மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷான், இம்முறை அதை இந்துப் புத்தாண்டு என்று மனு கொடுத்திருப்பதுதான். அவருக்கு எதுவேண்டுமாயினும் புத்தாண்டாக பண்டிகையாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் தை முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகவும், தமிழர் திருநாளாகவும், தமிழர் இனத்தின் பெருவிழாவாகவும் மலேசியத் தமிழர்கள் மமட்டுமின்றி, உலகவாழ் தமிழர்களும் கொண்டாடி வருகின்றனர். அப்படியிருக்க, தொடர்ந்து தமிழர்களின் இனம் சார்ந்த பல விடயங்களில் முரணான கருத்துகளையேப் பரப்பிவந்துள்ள மோகன் ஷான் எப்படி மலேசியத் தமிழர்களுக்குத் தலைவர் ஆனார்,” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“அண்மையில் நடைபெற்ற தமிழர் கடவுளான முருகனின் தைப்பூச விழாவிலும் கிரகணம் தொடர்பில் டத்தோ மோகன் ஷான் கூறிய கருத்துகளை நம் நாட்டின் சைவசித்தாந்த பெருமக்கள் மறுத்து மறுமொழியிட்டதை நாம் அறிவோம். இத்தகைய சூழலில், பிரதமருக்குக் கொடுக்கப்பட்ட மனுவில் டத்தோ மோகன் ஷான், மலேசிய இந்து சங்கத் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளதோடு கூடுதலாக தமிழர்களின் தலைவர் என்று குறிப்பிட்டு கையொப்பமிட்டுள்ளார். அவரின் இந்த தான்தோன்றித்தனமான செயலை மலேசியாவில் செயல்படும் தமிழர் இயக்கங்களும் தமிழர்களும் வன்மையாகக் கண்டிப்பதோடு, மலேசியத் தமிழர்களின் தலைவராக உங்களை யார் தேர்வு செய்தது?”, என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.
“டத்தோ மோகன் ஷானின் செயல், ஒரு திட்டமிட்ட சதியாகவே நாங்கள் பார்க்கிறோம். மலேசியாவில் இன்று தமிழர்களின் பெரும் விழாவாக மீட்சி பெற்றுவரும் தமிழர் தை முதல் நாளுக்கே மலேசியத் தமிழர்கள் அரசுப் பொது விடுமுறையை எதிர்பார்த்திருக்கும் வேளையில், அதற்குக் கீழறுப்பு செய்யவே அவர் தன்னை மலேசியத் தமிழர்களின் தலைவர் என்று கூறிக்கொண்டு சித்திரைப்புத்தாண்டை முன்னிலைப்படுத்த முயல்வது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அதற்காகவே இக்குழுவினர் தமிழர் இயக்கங்களை இதில் இணைத்துக் கொள்ளவில்லை என்பதும் தெளிவாகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மலேசியாவில் தொடர்ந்து தமிழர்களிடையே இனமீட்சி, பண்பாட்டு மீட்சி, சமய மீட்சி, வரலாற்று மீட்சி, பொருளாதார மீட்சி ஆகியவை தொடர்பான எழுச்சியினை மட்டுப்படுத்தவும் மடைமாற்றவும் பலர் தொடர்ந்து முயன்று வருகின்றனர். அவர்களைத் தமிழர் தேசியச் சிந்தனையாளர்கள் நன்கு அறிவர். அவர்களில் டத்தோ மோகன் ஷானும் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார் அவர்.
“எனவே, இனியும் தமிழர்களை ஏமாளிகள், கிள்ளுக் கீரைகள் என்று எண்ணி யாரும் விளையாட்டுக் காட்டவேண்டாம். இனியும் இத்தகைய செயல்களை யாரும் தொடர்ந்தால் சட்டப்படியான எதிர்விளைவுகளை அவர்கள் எதிர் கொள்ள வேண்டிவரும் என்று எச்சரிக்கிறோம்.
“இது தொடர்பாக மோகன் ஷான் உடனடியாக அம்மனுவை மீட்டுக் கொள்வதோடு, தமிழர் தலைவர் என்று தன்னை அறிவித்து ஏமாற்றுவேலை செய்தமைக்கு, மலேசியத் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,” எனவும் தமிழ்ப்புகழ் குணசேகரன் கேட்டுக்கொண்டார்.
சரியாக சொன்னார்கள் மலேசியத் தமிழர் களம் (ம.த.க.) மிகவும் எதிர்பார்த அறிக்கை இது. பூனைக்கு யார் மணி கட்டுவது. ஆம் மலேசியா இந்து சங்கம் என்ற போர்வையில் பதவியில் சுகம் காணும் அதன் தலைவர்கள் தமிழர்களுக்கு என்று எதாவது அரசாங்கத்திடம் குரல் எழுப்பி உள்ளனரா. அப்படி இருந்தால் அவைகளை பட்டியலிடும் மாறு கேட்டுகொள்கிறேன். அன்று மலேசியா தமிழ் மணி மன்றம் ஒன்று இருந்தது இப்போது இருக்கின்றதா என்று தெரிவில்லை. (அந்த மன்றம் தோன்றுவதற்கான காரணம் ; தமிழ் மொழி , கலை, கலாச்சாரம் வளர்வதற்கு அல்லது பாது காப்பாற்றுவதற்கு தேசிய நிலையில் இயக்கம் தோற்று விக்கப் படவேண்டும் என்ற அடிப்படை நோகத்திற்காக தொடக்கப் பட்டது. இதற்கு உதவியாக தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் மூத்த தலைவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தொடங்கப்பட்டது) அதன் அகப்பக்க முகவரி http://tamizsemmozi.blogspot.my/p/blog-page.html. அதை தோற்றுவிவித்த சா. ஆ. அன்பானந்தன் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்றாலும் அதன் உர்வமும் (இருக்கிறதா) மலேசியா தமிழ் மணி மன்றம் நமக்கு தெரியவில்லை இப்போது. இப்படி எத்தனையோ தமிழ் இயக்கங்கள் சங்கங்கள் இருக்கின்றன எல்லாம் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கின்றன என்று தெரிய வில்லை. இப்படி தமிழுக்காக ஆரம்பிக்க பட்ட சங்கங்களில் ஒன்று தான் மலேசியா இந்து சங்கம். நோக்கம் எல்லாம் சரிதான் அதில் இருக்கும் இந்து என்ற வார்த்தை எல்லா மதத்தினரையும் குறிக்கும் இடமாக உள்ளதால் அவர்கள் அதற்கு ஏற்பா செயல்படுகிறார்கள். இதற்கு மாற்றாக நாம் தமிழர்கள் மலேசியத் தமிழர் களம் (ம.த.க.) தோன்றி உள்ளது அதற்கு சார்பாக நாம் ஒன்று திரண்டு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து. ஒரு குறிபட்ட (பிராமணர்கள்) சார்பாக இவர்கள் குரல் கொடுகிறார்கள என்ற சந்தேகமும் எழுகிறது. மலேசியா திராவிடர் கழகம் இருந்தது. இப்போது அது செயல்படுகிறதா என்ற கேள்வி குறியும் வருகிறது. இப்படியே தமிழ் அமைப்புகள் சங்கங்கள் எல்லாம் தோன்றி மறைந்து செல்லும் வேலையில். இந்த மாதிரி மலேசிய இந்து சங்கம் எடுக்கும் முடிவுகளை கேட்பதற்கு ஒரு பலமான தமிழ் அமைப்பு நம்மிடையே உருவாக வேண்டும். அது மலேசியத் தமிழர் களம் (ம.த.க.) முன் வந்து குரல் கொடுத்து உள்ளது. வாழ்க உங்கள் சேவை முயற்சி. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. நாம் தமிழர்கள் யாரிடமும் சண்டை போடாமல் நமது சீக்கியர், தெலுங்கர், மலையாளி சகோதரர்கள் போன்று அமைதியான முறையில் அவர்கள் செயல்படுவது போல் நாமும் தமிழ், மொழி, கலை, கலாச்சாரம் என்று நமது நாட்டில் வளர்வதற்கு ஒன்றுபடுவோம் வாழ்க நமது தாய் மொழி தமிழ். வாழ்க தமிழ். ஒன்று படுவோம் இன்றே. நன்றி
இந்து சங்கம் என்பது தமிழருக்கானது மட்டுமல்ல என்பது அச்சங்கத்தின் நிலைப்பாடு. ஆனால் அச்சங்க உறுப்பினர்களில் வட இந்தியரின் உறுப்பியம் எத்தனை சதவீதம்? தெலுங்கர் மற்றும் மலையாளிகளின் உறுப்பினர் எத்தனை சதவீதம்? தமிழர்களின் உறுப்பியம் எத்தனை சதவீதம்? என்று கணக்கெடுத்துக் கூறட்டுமே.
அன்று தொட்டு இன்று வரை தமிழர்களால் வளர்க்கப்பட்ட இந்து சங்கம் இன்று தமிழருக்கல்லாததாகி விட்டது ஆச்சரியம். அதனால்தான் தை பொங்கலை பொது விடுமுறையாகவும் மலேசிய இந்தியரின் கலை கலாச்சார விழா கொண்டாடும் நாளாகவும் விண்ணப்பிக்க முடியாமல் போய் விட்டது இந்து சங்கத்திற்கு.
கொண்டாடுவதற்கு ஏதுமில்லாத சித்திரை முதல் நாளை விடுமுறையாக அறிவிக்கக் கேட்டுள்ளனர் இந்து சங்கத்தினர்.
எல்லாம் அந்த வைத்தியலிங்கத்தால வந்த வினை. யாரை எங்கே வைக்கனுமுன்னு தெரியாம செய்த வினையை இன்று இந்நாட்டுத் தமிழர் அனுபவிக்கின்றோம். செத்ததுடா தமிழரின் கலை கலாசாரம் இந்த நாட்டிலே.
தமிழர் களம் மலேசியா இயக்கத்தினருக்கு எனது வாழ்த்துகள். நம் நாட்டில் பல தமிழ் இயக்கங்கள் இருந்தாலும், காலத்திற்கேற்ப நமக்குத் தேவையானதை சரியான நேரத்தில், சரியான முறையில் செய்து வருபவர்கள் தமிழர் களம் மலேசியா இயக்கத்தினரே. திராவிடக் கருத்தியலால் தமிழர்களை குழப்ப வந்த தமிழ் நாட்டு திராவிட இறக்குமதிகளை நாட்டை விட்டு துரத்தியவர்கள் இவர்களே. உலகத் தமிழர்களை இனமாக ஒன்றிணக்க உலகத் தமிழர் இன்மீட்சி நாட்டை எதிர்ப்பாளர்களின் தடைகளையும் தாண்டி , தனி ஒரு இயக்கமாக மிகச்சிறப்பாக நடத்திக்காட்டியது இமாலயச் சாதனையாகும். இப்பொழுது மோகன் சானின் தில்லு முல்லுகளை தோலுரித்துக் காட்டியவர்களும் இவர்களே என்று பார்க்கும் போது, இன்று மலேசியாவில் சரியான பாதையில் சரியான கொள்கையில் பயணிக்கும் இயக்கமாக தமிழர் களம் மலேசியா என் கண்களுக்குப் படுகிறது. இவர்கள் முன்னெடுக்கும் இனமீட்சி நடவடிக்கைகளில் அவர்களுக்குத் துணையாக நிற்போம்.
இந்து சங்கத்திலிருக்கும் தமிழரே இன்று ‘இந்துத்துவாக’ மாறிவிட்டனர். அதற்கு அத்தாட்சி அச்சங்கத்தின் இந்து மத பரப்பு பிரிவுக்குத் தலைவராக இருப்பவராகும். மலேசிய RSS பிரிவினருடன் பின்னே கை கோர்த்துக் கொண்டு முன்னே தமிழர் வேசம் போடுவோர் இருப்பதால் இந்நாட்டு தமிழருக்கு வேறு வழியில்லை. கூடிய விரைவில் தமிழ் நாட்டுக்கு ஏற்பட்ட கதிதான் நமக்கும் ஏற்படப்போகுது.
ஒரே சிரிப்பு சிரிப்பா வருது … இந்து சங்கம் தவறு செய்கிறது என்றால் , உடனே இவர்கள் சொல்வது சரி என்று வாதிடுகிறார்கள். கேட்டாள் மீள்சி எழுச்சி என்று ஏதேதோ வாயிலையே வடை சுடுவதுதான் இவர்களின் தொண்டாம். இதில் ஒருவருக்கு கணக்கெடுத்து காட்டிட வேண்டுமாம் ! 25 – 30 லட்சம் இந்தியர்கள் இருக்கும் நாட்டில் , 45 – 60 லட்சமாக இருக்கும் அந்நியர்களுக்கு சலுகை வேண்டும் என்று அவர்கள் கேட்டால், முகத்தை எங்கே வைப்பார்கள் இவர்கள் ? செம்பனையில் மட்டும் 70 பில்லியன் வெள்ளியை , அந்நிய தொழிலாளர்கள் வருடா வருடம் இந்த நாட்டிற்கு லாபமாக தருகிறார்கள். மேலும் இந்த அந்நிய தொழிலாளிகள் வரி கட்டுகிறார்கள். எத்தனை இந்தியர்கள் வரி கட்டுகிறார்கள் ? அல்லது எத்தனை தமிழர்கள் கட்டுகிறார்கள் ? இவர்கள் கூறும் அதே தத்துவார்த்தத்தை , மலாய் காரர்களும் கூற இயலும் . வெறும் 7 % இருக்கும் ஒரு சமூகம் , கூலிவேலைக்கு இங்கே வந்த இன்னம் , எப்படி இந்த நாட்டில் சலுகைகளை எதிர்பாக்கலாம் ? ஓட்ட்றுமையில்லாமல் அடித்து கொள்ளும் சமூகத்திற்கு அதுவும் தேவைஇல்லை என்றால் , என்ன செய்வார்கள் இவர்கள் ? இந்த அகண்ட பெரு வெளியில் , பூமி இரவு 12 மணி நேரமும் பகல் 12 மணி நேரமும் சரியாக பிரிப்பது, ஒரு வருடத்தில் 2 முறை நடக்கிறது. இது இன்றைய கண்டு பிடிப்பு ! ஆனால் இதே நாளை , சித்திரை 1 என்று ஆதிகாலத்தில் தீர்மானித்த பின்பே சித்திரை ஒன்று தமிழர்களின் வருட பிறப்பானது ! இவர்கள் கூறும் தை 1 றில் பூமி அந்த நிலையில் இருந்து வேறு பட்டு , மாறு பட்டு இருக்கிறது . இருந்தாலும் முட்டால் தலைவன் கூறி விடடான் என்று என்னால் அதை பின் பட்ற முடியாது ! உடனே நான் தமிழன் இல்லை என்பார்கள் , இருந்து விட்டு போகிறேன் ! யாருக்கு வேண்டுமய்யா உங்கள் முட்டால் தமிழன் என்ற அடையாளம் ? அதை நீங்களே வைத்து கொள்ளும் !
இங்கே நாம் எதிர்பார்ப்பது கருதுக்கள் மோதல் இல்லை அதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கே செம்பருத்தி நமக்கு சுதந்திரம் கொடுது உள்ளது. இதே போன்று நமது தமிழ் பத்திரிகைளில் நாம் சுதந்திரமாக எழுதினால் பிரசாரம் ஆகாது. நமக்கு இங்கு மிக பெரிய வாய்ப்பு கொடுது உள்ளது நமது செம்பருத்தி. அடுத்து இங்கே நான் தமிழன் முட்டாள் தமிழன் அறிவாளி என்ற கேள்விக்கு வரவில்லை. இந்து என்றல் என்ன…. அடுத்து அது இந்து சங்கம் யாரை குறிக்கிறது. தமிழர்களைய, தெலுங்கர்ளைய, மலையாளிகளைய, சீக்கியர்களைய அதற்கு ஒரு தெளிவான இந்து சங்கம் முதலில் விளக்கம் கொடுக்க வேண்டும். இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் இந்து என்றால், பிரதமரிடம் வரும் 14 தேதி விடுமுறை கேட்டு அறிக்கை கொடுக்கும்போது மிகவும் வரவேற்க ஒன்று. அதில் தனிதனியே அவர்களின் மதங்களின் பெயரில் தலைவர்கள் கையெழுத்து போட்டு ஏன் கொடுக்க வேண்டும். அதில் இந்து சங்கம் தமிழன் சார்பாக திரு. ஷேன் மோகன் ஏன் எதற்க்காக கையெழுத்து போடுகிறார். இது என்ன ஞாயம். தமிழ்கார்களுக்கு என்று அந்த அறிக்கையில் கையெழுத்து போடுலாமே. அதில் தவறு இருக்கா. இந்து என்பது எல்லா மதத்தினரையும் குறிக்கும் ஒரு சொல். ஜாதி மதம் எல்லாம் அப்பாற்பட்டு வந்த சொல் தமிழ் என்பது அதில் வருவதுதான் ஒரு மொழி நம் மொழி தமிழ் மொழி.
இங்கே வேடிக்கை என்ன வென்றால் இங்கு நாம் அந்நிய தொழிலாளர்களை வைத்து பேசி இருக்கிறோம். அவர்கள் இங்கே குடியுரிமை பெற்றவர்கள் இல்லை. கூலி வேலைக்கு வந்தவர்கள். இங்கே உரிமைகள் கொண்டாட முடியாது. அந்நிய தொழிலாளர்கள் அவர்களின் கடமைகள் முடிந்ததும் அவர்களின் நாட்டிற்கு சென்று விடுவார்கள். பிறகு லேவி செலுத்தி மறுபடியும் வருவார்கள்.
நமக்கு அரசாங்கத்தை கேள்விகள் கேட்கும் உரிமை உண்டு. நாம் சிறுபான்மை என்பது உண்மை அதற்க்காக நம்மை நாமே தரம் தாழ்த்தி கோல வேண்டாம். சிறப்பான கருதுக்களை முன் வைக்கும் நண்பர் திரு. திலிப் போன்றவர்கள் ஒரு சில சமயம் கருதுக்களை முன் வைக்கும் பொழுது மனம் கணக்கிறது. நீங்கள் சொல்லும் கருத்துகள் சுவைத்து படிக்கும் போது சில சமயம் நேர்மாறான வீண் வம்புக்கு எழுதுவது போன்று உள்ளது. நாம் இங்கே எழுதுகிறோம் என்று நினைத்து வாயிலே வடை சுட முடியும் என்று நினைத்து கொள்ள வேண்டாம். இங்கு சிறுபான்மை பெரும்பான்மை என்று ஒன்றும் இல்லை. எல்லோருக்கும் இந்த நாட்டில் பிறந்த இருப்பினும் அதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் எல்லா உரிமைகள் உண்டு. முதலில் அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
செம்பருத்தியில் நன்கு தமிழ் படித்த தெலுங்கர் மலையாளி சீக்கியர்கள் மேதைகள் உண்டு. மொழி வெறி என வரும் பொழுது அவர்களுக்கு முதலில் தெரிவது தமிழனை எப்படி அடிப்பது என்று. காரணம் தமிழன் எவ்வளவு அடித்தாலும் தங்குவான் என்று தெரியுமோ?. அது ஒரு சில நேரம் காலம் தான் இருக்கும். நெடுநாளைக்கு இருக்கும் என உணரவேண்டும், நினைக்க வேண்டாம் நண்பர்களே. புறிந்து கொண்டால் சரி. நன்றி
யோவ் Dhilip 2 நீர் மட்டுமே முட்டாள் தமிழனா, இல்லை உங்கள் பரம்பரையேவா? தமிழினப் புத்தாண்டு தை 1 அய்யா. வெள்ளையன் கண்ட இந்து (150 ஆண்டுகட்கு முன்பு இந்து என்ற மதமே கிடையாது. ஷண்மதம் கண்ட ஆதிசங்கரரும் இந்து எனச் சொன்னதில்லை) மதப் புத்தாண்டு சித்திரை 1. இனம் வேறு, மதம் வேறு. மொழியால் நாங்கள் தமிழர்கள், மதத்தால் நாங்கள் சைவர்கள், நாட்டால் நாங்கள் மலேசியர்கள். உமது உளறல் கண்டு, தமிழனாய், சைவனாய் இரக்கப் படுகிறேன்.
மலையாளிகளுக்கு ஓணம், தெலுங்கருக்கு உகாதி, தமிழருக்குத் தை. இதுகூட விளங்காத அரைவேக்காடுகளே!
இந்து சங்கம் என்பது ஒரு தனியார் நிறுவனம். இது ‘Companies Act’ கீழ் நிறுவப்பட்ட நிறுவனம். ஆதலால் அந்நிறுவனம் அதன் உறுப்பினர்களுக்காக மட்டுமே பேச முடியுமே ஒழிய ஒட்டு மொத்த தமிழரை நிர்வகித்துப் பேச முடியாது. அப்படியிருக்க இன் நாட்டின் இந்தியரில் பெரும்பான்மையாக இருக்கும் தமிழரின் விருப்பத்தை அறியாது அரசாங்கம் எந்த முடிவையும் எடுத்தால் அது அவர்களுக்குப் பாதகமாகவே முடியும்.
இனியும் இந்து சங்கத்தை ஒரு பொருட்டாக நினையாது இந் நாட்டு தமிழர்கலெல்லாம் ஒரு குடையின் கீழ் இணைவது அவசியம். அதற்கு அறிவார்ந்த தமிழர் முன் வர வேண்டும். இல்லையேல் நம்மை முட்டாள் தமிழரென்று கூறும் ஒரு சில கழுத்து அறுபட்ட கோழிகள் துடிப்பதை நிறுத்த முடியாது.
நம் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது இந்த விடுமுறை என்பது அவ்வளவு முக்கியம் இல்லை .அப்படி அரசாங்கத்திடம் முறை இட்டாலும் பெரும்பான்மை தமிழர் கருத்து அறிந்து செயல் பட்டிருக்க வேண்டும் .இந்துமத தலைவர் தன்னை தமிழர் பிரதிநிதி என்று கூறினால் அது தவறு .. எப்படி இருப்பினும் இந்து மதம் அல்லது எம்மதமாக இருப்பினும் தமிழனை ஒன்றுபடுத்தவோ அல்லது தமிழின உயர்விற்கு வழி வகுத்ததாகவோ இன்று வரை சரித்திரமில்லை .
ஒத்துழைப்பு தந்து எமது நேர்மையான களப்பணிக்கு வலு சேர்த்துவரும் அனைவருக்கும் இவ்வேளையில் எமது உளமார்ந்த நன்றிகள்.
தமிழ்ப்புகழ் குணசேகரன்
தேசிய தலைமைப் பொறுப்பாளர்
தமிழர் களம் மலேசியா
பாவம் தமிழர்கள், புலியிடம் இருந்து தப்பித்து முதலையிடம் மாட்டிக்கொண்டனர் ! இன்னம் கொஞ்சநாளுல , நீ விருப்படுகிற கடவுளை கூட உன்னால் வணங்க முடியாது தமிழா , காரணம் … காரணம் ‘மக்களை காப்பாத்துறேன் பேர்விழி’ என்கிற இவர்கள் ஒரு குறிப்பிட்ட பொருளை காட்டி , இதுதான் கடவுள் , இவர்தான் அவர் , நான் சொல்றேன் நீ நம்பு என்று உன் சுதந்திரத்தை பறிப்பார்கள் . புத்திசாலித்தனமா எதையாவது அறிவியல் புருவமா நிருபிச்சைன , உடனே உன் பரம்பரையே முட்டால்கள் என்பார்கள். இல்லையென்றால்: ‘உன்னை நான் காப்புத்துறேன், என் பயிற்சி பட்டறைக்கு வா’, இல்லாவிடில் மத்தவன் உன்னை ஏமாத்திருவான்’ னு நடக்கிறதையெல்லாம் அவர்களுக்கு சாதகமா மாதிக்குவாய்ங்க ! இந்துனு சொன்னால் கோயிலை உடைப்பன் தமிழனு சொன்னால் உடைக்க மாடடான் என்று வெக்க படாம சொல்வாய்ங்க. தர்க்கம் பண்ண , இந்தியனா யாரு என்பான் . விளக்கினாலும் ஏத்துக்க மாட்டான் ! எப்படியாவது யாரையாவது குறை சொல்லி கொண்டே இருப்பான் ! கேட்ட ‘மக்களை காப்பாத்துறேன் பேர்விழி’ என்பான் ! நேராக விசயத்திற்கு வருகிறேன். கடவுள் பொதுவானவர். மதமோ மார்க்கமோ அது தனி மனித உரிமை ! இதில் கட்டாய படுத்தி, ஒருவனை ஒரு மதத்தில் அடைக்க கூடாது ! அவன் சேர வில்லை என்றதும் , அவன் இனத்தையும் , அவன் குடும்பத்தையையே விமர்சிப்பது என்பது படுத்து கொண்டு காரி துப்புவதற்கு சமம். காரணம் , நாளை உன் குடும்பத்திலேயே உன் தத்துவம் பிழை என்று ஒருவன் நாளை சொல்வான். அன்று நீ செய்த தீங்கை நினைத்து பார்ப்பாய் ! அன்று அதிதி கேட்க்கும் : “உனக்கு வந்தா ரத்தம் , அவனுக்கு வந்தா தக்காளி சட்னியா ?”
(பாவம் தமிழர்கள்)? என்று சொல்லும் போதே தெரிகிறது. இவர் தமிழராக இருக்க முடியாது என்று. தெலுங்கர், மலையாளி, கிருஸ்தவர், முஸ்லிம், போன்ற நண்பர்கள் தமிழ் பள்ளி சென்று படித்து பிறகு அவர்களின் ஜாதி மதம் என்று வரும் பொழுது மறைமுகமாக தமிழர்களை தாக்குவது இவர்களுக்கு கை வந்த கலை. பருவாயில்லை இருப்பினும் தமிழராக இல்லாதவர்கள் துணிந்து இங்கு கருதுக்கள் சொல்லும்போது தான் இன்னார் இந்த மதத்தை சேர்ந்தவன் என்று துணிந்து சொல்லலாமே. அதில் தவறு இருபதாக தெரியவில்லை. 10 வருடம்மாக என்னுடன் சேர்ந்து பழகிய என் நண்பர் தமிழ் பள்ளி சென்று நன்கு எழுத படிக்க தெரிந்தவர். அந்த 10 வருடம் எனக்கு தெரியது இவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்று. சதா எப்போது பார்த்தாலும் தமிழன் தமிழன் என்று சொல்லும் நண்பர் தமிழன் முட்டாள் தமிழனுக்கு அறிவு இல்லை என்றும் தமிழன் பற்றி அதிகம் வசை பாடுவது உண்டு. ஒரு நாள் அவரின் மகனின் அடையாள அட்டை என்னிடம் கான்பித்த பொழுது அதிர்ந்து போனேன் அப்போது அவரிடம் கேட்டேன் உங்களின் மதம் என்னவென்று அப்போ அவர் சொன்னர் நான் ஒரு தெலுங்கர் என்று. பார்த்திர்களா இப்படிதான் மற்ற இனத்தவர்கள் தமிழ் பள்ளி சென்று தமிழை நன்கு படித்து தமிழனை தாக்கு தாக்கு எனதாக்குவது உண்டு.
நமக்கு தெரியாது இங்கு தமிழ் படித்த மற்ற இனத்தவர்கள் இங்கு இருப்பது. ஆனல், தமிழனை பற்றி இழிவாக எழுதும் போதும், பேசும் போதும் அவர்களுக்கு ஒரு சந்தோசம். நாமும் மற்ற இனத்தவர்களை பற்றியும் அவர்களின் கொள்கைகளையும் எழுத பற்றியும் முடியும்.
மானம் ரோசம் இல்லாத ஒரு சில சிலைரைகள் இப்படி எழுதுவது வேதனை அளிக்கிறது. யாரையும் குறிப்பிட்டு எழுத விரும்பவில்லை இருப்பினும் தமிழன் (பாவம் தமிழர்கள்) என்று எழுதும் பொழுது அந்த என் நண்பர் ஞாபகம் வருகிறது. நன்கு பாருங்கள் (நண்பர்) அவரின் எழுது படிவங்களை சதா தமிழன்களை கூறி வைத்தே விமர்சனம் வருகிறது. வரும் முன் காப்பதே நம் கடமை. ஒரு சில தமிழர்கள் தவறுகள் செய்து இருப்பினும் ஒட்டு மொத்த தமிழர்களை விமர்சனம் செய்வது சிறப்பு இல்லை. நான் இந்த மதத்தை சேர்ந்தவர் என்று துணிந்து சொல்லி விட்டு விவாதத்தில் வந்தால் சிறப்பாக இருக்கும். இனி கருதுக்கள் கூறும் பொழுது கவனமாக இருக்கவும்
ஹாஹாஹா , ஐயோ பாவம் தமிழர்கள் ! எப்படி எப்படி எல்லாம் தமிழர்களை மற்ற பிரிவினர்களிடம் இருந்த பிரிப்பதில் இவர்களுக்கு எவ்வளவு ஆசை ? இது என்ன ஆளும் அரசாங்கத்தின் சதியா ? மா இ கா வின் முன்னாள் உறுப்பினர்கள் என்றாலும் மா இ கா வின் சிந்தனை ரத்தத்திலும் கலக்குமா ? நான் தான் புரிந்து கொள்ளவில்லையா ? இந்தியாவின் சுதந்திரம் 1937 லேயே நேதாஜி சுபாஷ் சந்திரபோசினால் முன்மொழிய பட்டது. குறைந்த பட்சம் தேர்தலை யாவது நடத்த வேண்டும் என்றார் நேதாஜி. ஆனால் பிரித்தாளும் சூழ்ச்சியில் கைதேர்ந்த Britain இந்து முஸ்லீம் விளையாட்டை அவிழ்த்து விட்டு மேலும் ஒரு 10 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டு விட்டுத்தான் திருப்பி தந்தார்கள் ! அப்படி இருக்கிறது ஜி. மோகன் – கிள்ளான் அவர்களின் கூற்று. இவர்களின் கருத்துக்கு மாற்று கருத்து ஏதாவது துணிந்து சொல்லி விடடால் பொதும், அடுத்தது நிமிடமே , நான் தமிழர் இல்லை , கலப்படம் , என் பரம்பரையே முடடால், திராவிடன் , அவன் இவன் என்று பொரிந்து தள்ளிவிடுவார்கள் ! தை 1 றில் , உலகம் தமிழர் வருடப்பிறப்பை கொண்டாட எந்த தகுதியும் இல்லை என்றாலும் , நாங்க சொல்றோம் , நீ கொண்டாடணும் என்று ஆடர் போடுவது ! உள்ளவனே இல்லாத ஊர்ல மாட்டு பொங்கல் நடத்துவது …. கேட்டால் மற்றவர்கள் compare பண்ணுவது , ஒரே சிரிப்பு சிரிப்பாக வருகிறது ! பிரித்தாள்வதால் , இந்தியர்களில் எந்த பிரிவினருக்கும் லாபம் இல்லை ! இதை நான் பலகாலமாக கூறி வருகிறேன் . இதை புரிந்து கொண்ட ஒரு சில மா இ கா தலைவர்கள் , லாவகமாக செம்பருத்தியை ஊடுருவி இருக்கலாம் என்று நம்புகிறேன். இருப்பினும் கருத்து சுதந்திரம் யாவருக்கும் பொது என்பதால்நாள் கருத்தாலே நான் எதிர் கொள்கிறேன் .