லங்காவி ஸ்கைகேப் கேபிள் கார் சேவையை நடத்திவரும் பனரோமா லங்காவி சென்.பெர்ஹாட், நேற்று கேபிள் கார் சேவை கோளாறு ஏற்பட்டடதற்கான காரணத்தை முழுமையாகக் கண்டறியும்.
நேற்று கேபிள் கார் சேவையில் ஏற்பட்ட கோளாற்றினால் சுற்றுப்பயணிகள் பலர் கேபிள் காரில் அந்தரத்தில் சிக்கித் தவித்தனர்.
நேற்றைய சம்பவத்துக்குப் பழுதடைந்த ‘பேரிங்’தான் காரணம் என்று தெரிய வந்திருப்பதாகக் கூறிய பனரோமா லங்காவி வாரிய உறுப்பினர் அசிசான் நூர்டின், மீண்டும் இப்படிப்பட்ட கோளாறு நிகழாதிருக்க முழு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.
கேபிள் கார்கள் ஓடாமல் அந்தரத்திலேயே நின்று போனதால் மொத்தம் 1048 சுற்றுப்பயணிகளும் 78 பணியாளர்களும் தவித்துப் போனார்கள்.
மீட்புப் படையினர் இரவு மணி ஒன்பதிலிருந்து நள்ளிரவுவரை மூன்று மணி நேரம் கட்டம் கட்டமாக அவர்களை மீட்டுக் கொண்டு வந்தனர்.
2002-இல் தொடங்கப்பட்ட அச்சேவையில் நேற்று நிகழ்ந்ததுபோல் மிக மோசமான சம்பவம் இதற்குமுன் நிகழ்ந்ததில்லை எனக் கூறப்படுகிறது.