இரண்டு தசாப்தங்கள் நாட்டை வழிநடத்திய டாக்டர் மகாதிர் முகம்மட் 92வது வயதில் பக்கத்தான் ஹரபானின் பிரதமர் வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த வயதில் மகாதிருக்கு இது தேவையில்லை என்கிறார் சரவாக்கின் முன்னாள் துணை முதல்வர் டாக்டர் ஜார்ஜ் சான்.
“எல்லாவற்றுக்கும் காலமும் இடமும் உண்டு”, என்றவர் கூறியதாக த போர்னியோ போஸ்ட் அறிவித்துள்ளது.
“நம் காலம் முடிந்த பிறகு மீண்டும் திரும்பி வர முயலக்கூடாது. நமது காலம் முடிந்து போனது என்கிறபோது நடப்பில் உள்ள பலவற்றோடு நம் சிந்தனை ஒத்துப்போகாது என்பதுதான் அர்த்தம்”, என்றாரவர்.
நாட்டுக்கு நிறைய பங்களித்துள்ள மகாதிருக்கு இப்போது தேவை ஓய்வு என்று அந்த 81-வயது எஸ்யுபிபி முன்னாள் தலைவர் குறிப்பிட்டார்.
“அவரை நாம் விட்டுவிட வேண்டும். நாட்டுக்கு நிறைய செய்திருக்கிறார். அவர் இப்போது ஓய்வெடுத்துக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்”, என்றாரவர்.