மசீச துணைத் தலைவர் வீ கா சியோங் ஒரு நாணயமில்லாதவர் என்று இன்று மதியம் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் குற்றம் சாட்டினார்.
இது சீனப் புத்தாண்டின் நான்காவது நாள் மட்டுமே. தயவு செய்து பொய் சொல்வதை நிறுத்துவீர் என்று குவான் எங் செய்தியாளர்களிடம் கூறினார்.
த ஸ்டார் நாளிதழ் வீ கா சியோங் கூறியதாக அவரை மேற்கொள்காட்டி பினாங்கு முதல்வர் குவான் எங் ஜோகூர், ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்ற தொகுதியில் தமக்கு எதிராக போட்டியிடும் சாத்தியம் பற்றி கூறியிருந்ததற்கு எதிர்வினையாற்றிய குவான் எங் இவ்வாறு கூறினார்.
மேலும், பாக்கத்தான் ஹரப்பான் ஒரு வான்குடை வேட்பாளர்களை ஆயர் ஹீத்தாமில் இறக்கும் சாத்தியமும் உண்டு. ஏனென்றால் எதிரணிக்கு ஒரு மதிப்புமிக்க தலைவர் அப்பகுதியில் இல்லை என்று வீ கா சியோங் கூறியிருந்தார்.
தமக்கு ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எண்ணமே இருந்ததில்லை என்று கூறிய குவான் எங், தமது பெயரை பயன்படுத்தி அவர் விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்றார்.
மசீசவில் வீ கா சியோங் இரண்டாம் நிலை தலைவராக இருப்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். போட்டி என்ற ஒன்று இருந்தால் அது ஒன்றாம் நிலையில் இருப்பவருக்கு எதிராக ஒன்றாம் நிலையில் இருப்பவர் போட்டியிட வேண்டும் என்று டிஎபியின் தலைமைச் செயலாளரான குவான் எங் கூறினார்.
வீ காசி யோங் மசீசவின் ஒரு தலைவர் என்ற முறையில் அவர் சீனர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதியில் போட்டியிட வேண்டும், மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதியில் அல்ல என்றார் குவான் எங்.
“ஆனால், சீனர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதியில் போட்டியிடுவதற்கான தைரியம் வீ காசி யோங்கிற்கு இருக்கிறது நான் நினைக்கவில்லை”, என்று குவான் எங் மேலும் கூறினார்.