ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கோமாளியாக்கி ஓவியம் வரைந்த வரைகலை வடிவமைப்பாளர் ஃபாமி ரேஸாவுக்கு ஒரு மாதச் சிறையும் ரிம 30,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.
அக்கேலிச் சித்திரத்தை மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் அடையாளச் சின்னத்தோடு பதிவேற்றம் செய்ததற்காக தொடர்பு, பல்லூடகச் சட்டம் (சிஎம்ஏ) பிரிவு 233(1) (ஏ) இன்கீழ் ஃபாமிமீது கடந்த ஆண்டு ஜூனில் குற்றஞ்சாட்டப்பட்டது.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஃபாமியின் வழக்குரைஞர் ஷாரேட்சான் ஜொஹான் மலேசியாகினியிடம் தெரிவித்தார். நீதிபதி தீர்ப்பை நிறுத்தி வைக்க உடன்பட்டு ரிம10,000 பிணையில் ஃபாமியை விடுவித்தார்.
நீதிபதி நோராஷிமா காலிட் தீர்ப்புக்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை என்றும் குற்றச்சாட்டு பொய் என்பதற்கு எதிர்தரப்பு போதுமான ஆதாரங்களைக் காண்பிக்கவில்லை என்று மட்டுமே கூறினார் என ஷாரேட்ன் சொன்னார்.