பொதுத் தேர்தல்14 – ‘நான் பெக்கானுக்கு போக விரும்புகிறேன்’, மகாதிர் கூறுகிறார்

 

14 ஆவது பொதுத் தேர்தலில் எங்கே போட்டியிடப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் ஒரு புலனாகாத பதிலை அளித்தார்.

பிரதமர் நஜிப் ரசாக் மீதான அவரது தாக்குதலில், தாம் நஜிப்பின் நாடாளுமன்ற தொகுதியான பெக்கானில்கூட தோன்றக்கூடும் என்று மகாதிர் எச்சரிக்கை விடுத்தார்.

“நாங்கள் நஜிப்புக்குச் சொல்ல விரும்புவது, நான் பல இடங்களில் தோன்றுவேன், புத்ரா ஜெயா உட்பட. நான் புத்ரா ஜெயாவுக்கு சென்றுள்ளேன். நான் அங்கு பிரபல்யமாக இருந்தேன். நான் மக்களோடு சேர்ந்து இடைவிடாமல் படம் எடுத்துக் கொண்டேன்.

“நான் பல இடங்களுக்கும் போவேன். நான் பெக்கானுக்கும் போவேன். அலோர் ஸ்டாரில் பல சிறிய நகரங்கள் இருக்கின்றன. பெக்கானுக்குச் சென்று வாக்காளர்களைச் சந்திக்க விரும்புகிறேன்”, என்று பெட்டாலிங் ஜெயா பெர்சத்து தலைமையகத்தில் ஹரப்பான் தலைமைத்துவ மன்ற கூட்டத்திற்கு பின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மகாதிர் கூறினார்.

நான் லங்காவில் போட்டியிடுவேன் என்று நஜிப் நினைப்பதாகத் தெரிகிறது. எனது தோல்வியை உறுதிப்படுத்துவதற்காக அவர் ஒரு புதிய பட்ஜெட் அறிவிப்பு செய்தார்.

பையில் நிறைய பணம் இருக்கும் ஒரு பெரும் பணக்காரர் போல் அவர் நடந்துகொள்கிறார். நாடாளுமன்ற ஒப்புதலை அவர் பெற வேண்டியதில்லை. அவர் எங்கு பணம் கொடுக்க வேண்டும் நினைக்கிராறோ அங்கு கொடுப்பதாக அறிவிக்கிறார்.

நஜிப்பின் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கத்திடம் போதுமான பணம் இருக்காது என்றார் மகாதிர்.

சமீபத்தில் நஜிப் லங்காவிக்கு போனார். அங்கு ரிம1.3 பில்லியன் கொடுக்கப் போவதாக சொன்னார். நான் குபாங் பாசுவில் போட்டியிட விரும்புகிறேன். அங்கேயும் அவர் அதிகமான நிதி ஒதுக்கீடுகள் செய்யலாம் என்று மகாதிர் மேலும் கூறினார்.