பொருளாதாரம் சிறப்பாக உள்ளத்தை எதிரணி ஒத்துக்கொள்ள வேண்டும்- சாலே

எதிரணியினர்   மலேசியா  நல்ல   நிலையில்  உள்ளதையும்    அரசாங்கக்  கொள்கைகள்    சிறப்பாக    செயல்படுவதையும்   ஒப்புக்கொள்ள  வேண்டிய   நேரம்   வந்தாயிற்று   என்கிறார்   தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்  சாலே சைட்  கெருவாக்.

மலேசியா   நொடித்துப்  போகும்  நிலையில்   இருப்பதாக   எதிர்க்கட்சிகள்  புளுகி  வந்துள்ளன. அவற்றின்  கூற்று   பொய்  என்பதை   அனைத்துலக    செய்திகள்   நிரூபித்தாலும்கூட   அவை  விடாமல்   புளுகி  வந்துள்ளன  என்றாரவர்.

“அடிக்கடி   மலேசியப்  பொருளாதார  முன்னேற்றங்கள்    அரசியலாக்கப்பட்டு   உண்மைக்கு  மாறான விவரங்கள்   மக்களிடம்  எடுத்துரைக்கப்படுகின்றன”,  என்று  சாலே   தம்   வலைப்பதிவில்   கூறினார்.

அனைத்துலக   நாடுகளைப்  பொருத்தவரை    அவை  மலேசியாவின்   சாதனைகளை  உணர்ந்து   அது   சரியான   திசையில்   சென்று  கொண்டிருப்பதைப்   புரிந்து  வைத்துள்ளன    என்று   சாலே   கூறினார்.

உலக  வணிக  அமைப்பின்  43  உறுப்பு   நாடுகள்  பொருளாதாரச்  சாதனைகளுக்காகவும்   விவேகமான   வணிக,  பொருளாதாரக்  கொள்கைகளுக்காகவும்   மலேசியாவைப்     பாராட்டியிருப்பதாகவும்    அவர்  குறிப்பிட்டார்.