தேர்தல் ஆணையம் சாபாவில் தனியார் நிறுவனங்களின் ஹாலிகாப்டர்கள் அனைத்தையும் ஏப்ரல், மே மாதங்களுக்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டிருப்பதாக த ஸ்டார் ஆன்லைன் அறிவித்துள்ளது.
சாபாவின் இரண்டு ஹெலிகாப்டர் நிறுவனங்களும் இத்தகவலைத் தெரிவித்தனவாம்.
ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை வைத்து அம்மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. அதேவேளை ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் சாத்தியம் இருப்பதையும் மறுக்கவியலாது.
மக்களவை மார்ச் 5-இல் தொடங்கி ஏப்ரல் 5வரை 20 நாள்களுக்கு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
மே 15இல் நோன்பு மாதம் தொடங்குவதால் அதற்கு முன்னதாக தேர்தலை நடத்தத்தான் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விரும்புவார் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அதுவும் நிச்சயமில்லை. 2016-இல் இரண்டு இடைத் தேர்தல்கள் ரமலான் மாதத்தில் நடத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்றம் ஜூன் 24-இல் இயல்பாகவே கலைந்துவிடும். அதன் பின்னர் ஆகஸ்ட் 24குக்குள் இசி தேர்தலை நடத்தியாக வேண்டும்.
ஆம்! தேர்தல் வருவதற்கான அறிகுறிதான். எவ்வளவு நாள் நடுவண் அரசாங்கம் தேர்தலைப் பின் தள்ளிப் போடுகின்றனரோ அவ்வளவும் அவர்களுக்குப் பாதகமாக முடியும் என்பதை நடுவண் அரசாங்கம் நன்றாகவே அறிந்து வைத்துள்ளது.