ஊழல் குறியீடு : மலேசியா இப்போது கியூபாவுக்கு நிகராக உள்ளது

புதிய ஊழல் குறியீட்டில் (சிபிஐ) மலேசியா, கம்யூனிச அரசான கியூபாவுக்கு நிகராக உள்ளது.

சுழியத்திலிருந்து 100 வரையிலான அளவில், இரு நாடுகளுக்கும் 47 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

சுழியம் என்பது ஆக மோசமான ஊழல் என்றும் 100 மிக சுத்தமான நாடு எனவும் பொருள்படுகிறது.

இன்று, கோலாலம்பூரில், மலேசிய சர்வதேச வெளிப்படைத்தன்மை (தி.ஐ.-எம்) அமைப்பால் வெளியிடப்பட்ட அந்தக் குறியீடு அட்டவணையில், மலேசியாவும் அந்த கெரீபியன் நாடும் 62-வது இடத்தில் உள்ளன.

கடந்தாண்டு வெளியிடப்பட்ட 2016 குறியீடு அட்டவணையில், 49 புள்ளிகள் பெற்று, 55-வது தரவரிசையில் மலேசியா இருந்தது.