மலேசியாகினி அதன் சட்டக் காப்பு நிதிக்கு தாராளமாக வாரி வழங்கிய அதன் வாசகர்களுக்கு நன்றி தெரிவிக்க ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் “த போஸ்ட்” திரைப்படத்தை இலவசமாக திரையிடவுள்ளது.
அப்படம் (பெட்டாலிங் ஜெயாவில் பண்டார் உத்தாமாவில் உள்ள) டிஜிவி 1 உத்தாமா தியேட்டரில் , மலேசியாவில் அப்படம் மலேசியாவில் திரையிடப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக, மார்ச் முதல் நாள் இரவு 9மணிக்குத் திரையிடப்படும்.
நன்கொடை வழங்கியவர்களும் நீண்டகால சந்தாதாரர்களும் இந்த இலவசக் காட்சிக்கு ஆளுக்கு இரண்டு நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என மலேசியாகினி தெரிவித்துக் கொண்டுள்ளது.
வியட்நாம் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டிய த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குற்றச்சாட்டுகளை நிரூபிக்க பெண்டகன் பேப்பர்ஸ் ஆவணங்களையும் வெளியிட்டுப் பரபரப்பை உண்டாக்கியது. அதைச் சுவைப்பட சொல்லும் ஓர் அரசியல் படம்தான் ‘த போஸ்ட்’.
மெரில் ஸ்ட்ரீப், டோம் ஹெங்ஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை நானும் பார்த்தேன் ! முதல் பாகம், நன்றாக வந்திருந்தது ! அதன் தொடர்ச்சியே இப்பொழுது இரண்டாம் பாகமாக வெளியிடப்படுகிறது ! இதில் முக்கிய அம்சம் யாதெனில் , போர் ரகசியங்களை தாட்க்களில் ஆவணம் செய்யும் பொழுது , அதற்கு PAGE NUMBER இல்லாமல் அச்சிடப்படும், ரகசியங்களை பாதுக்காக்க ! அதை பத்திரிக்கை ஆசிரியர்கள் பெருமக்கள் பிரித்தெடுப்பது நன்றாக இருக்கும் ! படத்தை பாருங்கள் பத்திரிக்கையின் பங்களிப்பை பாராட்டுங்கள் ! பின் குறிப்பு : Nixon அவர்கள் Watergate ஊழல் , Appollo 20 என்று நிறைய scandalil மாட்டியவர் என்பதனை நினைவில் வைத்து கொண்டு படத்தை பாருங்கள் !
நாஜிபு அல்தான் தூயா வுக்கு இரண்டு சீட்டுகள் கொடுக்கவும்.