அரசியல்வாதிகள் ‘நடைமுறைக்கு ஒத்துவராத’ தேர்தல் வாக்குறுதிகளை நிறுத்த வேண்டும்

மசீச  முன்னாள்    தலைவர்   ஒருவர்   அரசியல்வாதிகள்   வரிகளை   அகற்றப்போவதாகவும்   உதவித்   தொகைகளைக்  கூட்டப்  போவதாகவும்    “நடைமுறைகு   ஒத்துவராத”   தேர்தல்   வாக்குறுதிகள்  கொடுப்பதை  முதலில்   நிறுத்த   வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டுள்ளார்.

“அண்மைக்  காலமாக  இரு    தரப்பிலுமே   வாக்காளர்களைக்  கவரும்  முயற்சிகள்  முடுக்கி  விடப்பட்டிருப்பதைப்  பார்க்கிறோம்.

“இலவச   நெகிழி(பிளாஸ்டிக்)ப்  பைகள்   திரும்பக்  கொண்டு  வரப்படும்,  பொருள்  சேவை  வரிகள்(ஜிஎஸ்டி)   அகற்றப்படும்,    உதவித்  தொகைகள்   அதிகரிக்கப்படும்  என்றெல்லாம்   கூறுகிறார்கள்.

“எந்தவொரு     பொருளாதார   வல்லுனரைக்    கேட்டாலும்     சொல்வார்   இந்த  வாக்குறுதிகளில்   மிகப்பல   நீண்டகாலப்  போக்கில்   நாட்டுக்குக்  கேடு  விளைவிப்பன  என்று.

“குறுகிய-கால    தேர்தல்  வெற்றிக்காக   நாட்டின்   நீண்ட-கால   நலனைப்  பலியிடக்கூடாது”,  என  முன்னாள்   துணை   அமைச்சரான   கான்  பிங்    இன்று  ஓர்   அறிக்கையில்   கூறினார்.