பிரதமர் அலுவலகத்திலிருந்து செயல்படும் இந்திய சமுதாயத்தின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பிரிவான செடிக், ஊழலை எதிர்க்கும் எம்ஏசிசி உறுதிமொழியை எடுத்துக்கொண்டு கடமையை நேர்மைதவறாமல் செய்வதாய் சூளுரைத்தது.
செடிக் அதிகாரிகளும் செடிக்கிடமிருந்து மான்யங்கள் பெறும் என்ஜிஓ-களும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்கள்.
இந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்வது இந்திய சமூகத்துக்கு உதவும் செடிக் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுவதற்கு முக்கியமாகும் என மஇகா தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார்.
“இந்திய சமூகம் பயனடைய ஒளிவுமறைவற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்”, என்றவர் நேற்றிரவு உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் சடங்கில் கூறினார்.