14 ஆவது பொதுத் தேர்தலில் சீன வாக்காளர்களிடமிருந்து கூடுதல் ஆதரவை. குறிப்பாக நகர்புற பகுதிகளிலிருந்து, திரட்ட முடியும் என்று மசீச தலைவர் நம்புகிறார்
கடந்த இரண்டு தவணைகளில் எதிரணி எவ்வித உறுதியான மேம்பாடுகளைக் கொண்டு வராததால், சீன வாக்காளர்களின் ஆதரவு அலைபோல் வந்து கொண்டிருக்கிறது என்று மசீச தலைவர் லியோ தியோங் லாய் கூறிக்கொண்டார்.
சீனர்கள் மசீசவுக்கு திரும்புவது கோலாலம்பூரில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால் கடந்த 10 ஆண்டு காலத்தில் டிஎபி நாடாளுமன்ற தொகுதிகளை அதன் வசம் வைத்திருந்த போதிலும் அதனால் மக்களுக்கு வேண்டியதைச் செய்ய முடியவில்லை.
அவர்களைச் சந்தித்து அவர்களுடன் பேசுகிறேன். நாங்கள் கைகுலுக்கிக் கொள்கிறோம். அவர்களின் ஆதரவை என்னால் உணர முடிகிறது. இம்முறை (14 ஆவது பொதுத் தேர்தல்) வாக்குகள் மசீசவுக்கும் பிஎன்னுக்கும் கிடைக்கும் என்றுகூட அவர்கள் கூறினர் என்றார் லியோ.
துன் ரசாக் தொகுதி மற்றும் கூட்டரசுப் பிரதேச அளவிலான சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் லியோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் அப்பகுதியிலுள்ள 3,000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர், அதில் மலாய் மற்றும் இந்தியச் சமூகத்தினர்களும் அடங்குவர்.
அப்படியே நகர்புற சீனர்கள் ம.சீ.ச. பக்கம் போனார்களேயானால் அவர்களை விட பச்சோந்திகள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். அடுத்து சீன இனம் அவர்தம் மரியாதையை இழந்து விடுவார். அப்புறம் அவர் வார்த்தைகளை எவரும் மதிக்கமாட்டார்.
மசீச தலைவர் அவர்களே, நீங்கள் நகர்புற பகுதிகளிலிருந்து சுமார் 100 சீனர்களை அழைத்து ஒருவர் பின் ஒருவராக இபோதே 14 ஆவது பொதுத் தேர்தல் வரும் முன்னமே கேளுங்கள். உங்கள் ஓட்டு யாருக்கு போடுவிர்கள் என்று. தெரிந்து விடும்.