நஸ்ரி, குவோக்கை இழிவுப்படுத்தியது சீன சமூகத்தையே இழிவுப்படுத்தியதாகும், சோங் கூறுகிறார்

சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக்கை கடுமையாக இழிவுப்படுத்தி பேசியிருப்பது சீன சமூகத்தையே இழிவுபடுத்தியதற்கு ஒப்பாகும் என்று மசீச இலைஞர் பிரிவுத் தலைவர் சோங் சின் வூன் கூறுகிறார்.

குவோக் சாதாரண மனிதர் அல்ல. அவர் உலகமுழுவதிலுமுள்ள சீன சமூகத்தினரால் மதிக்கப்படுகிறவர். அவரை நஸ்ரி அவமானப்படுத்தியதால் சீனர் சமூகம் துன்புற்றுள்ளது என்று சோங் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

குற்றம் சாட்டுவதற்கு நஸ்ரி தவறான ஒருவரைத் தேர்ந்தெடுத்துள்ளார். நன்மதிப்புக்குரிய தொழிலதிபர் எந்த வழியிலும் எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதைச் சொல்லத் தேவையில்லை என்றாரவர்.

குவோக்கிடம் மன்னிப்பு கோருவதற்கான துணிச்சலுடையவராகவும் உண்மையான ஆண்மகனாகவும் நஸ்ரி இருக்க வேண்டும் என்று சோங் வலியுறுத்தினார்.