இந்தோனேசியா, எப்பிஐ பாலியில் ஜோ லோவின் உல்லாசப்படகை கைப்பற்றின

 

1எம்டிபிலிருந்து உறிஞ்சிய பணத்தில் வாங்கியதாகப் கூறப்படும் ஈக்குவானிமிட்டி என்ற பெயரைக் கொண்ட உல்லாசப்படகு பாலியில் இந்தோனேசியா மற்றும் அமெரிக்க எப்பிஐயின் கூட்டு நடவடிக்கைக்குப் பின்னர் கைப்பற்றப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பரிலிருந்து அப்படகு இந்தோனேசியக் கடலில் இருந்து வருவதாகவும் அதில் 34 சிப்பந்திகள் இருந்ததாகவும் இந்தோனேசிய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

அப்படகு நீதிமன்ற அனுமதியுடன் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. அப்படகை எட்டு நாள்களாக போலீசார் கண்காணித்து வந்துள்ளனர்.

அந்தப் படகில் ஜோ லோ இருந்தாரா என்பது பற்றிய தகவல் ஏதும் இல்லை.

அந்த உல்லாசப் படகு 1எம்டிபி சம்பந்தப்பட்ட பணச் சலவை செய்யப்பட்ட பணத்திலிருந்து வாங்கப்பட்டது என்ற அடிப்படையில் அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) அதைத் தேடிக்கொண்டிருந்தது.