அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக்கை இழிவுபடுத்தியது ஒட்டுமொத்த சீன சமூகத்தையும் இழிவுப்படுத்தியதற்கு ஒப்பாகும் என்று மசீசவின் இளைஞர் பிரிவுத் தலைவர் சோங் சின் வூன் விடுத்திருந்த அறிக்கைக்காக மசீச-வை இன்று அமைச்சர் நஸ்ரி சாடினார்.
குவோக் சீனச் சமூகத்தை பிரதிநிதிக்கவில்லை என்று மீண்டும் கூறிய நஸ்ரி, மசீசவும் சீனச் சமூகத்தைப் பிரதிநிதிக்கவில்லை என்றார்.
எனது கருத்தின்படி, அதிகமான சீன இருக்கைகளை வென்ற கட்சிதான் சீனர்களின் குரலாக இருக்க முடியும். அது மசீச அல்ல என்று நஸ்ரி கூறினார்.
2013 ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கையில், மலேசிய சீனர்களின் குரலாக இருப்பது டிஎபி என்று சுலபமாகக் கணிக்க முடியும். அதில் அதிகாரம் செலுத்துபவர் ”தோகோங்” லிம் குவான் எங் என்று கருத்துரைத்த நஸ்ரி, “அதனால்தான் நான் அவருடன் இணைந்து வேலை செய்கிறேன், ஏனென்றால் அவர்தான் சீனர்களின் குரல்” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
குவோக் மீது புதிய தாக்குதல் எதையும் மேற்கொள்ளாத நஸ்ரி, அவர் (குவோக்) சீனர்களின் குரல் அல்ல. அவர் ஒரு சீனராக இருக்கிறார், அத்தொழிலதிபர் ஹாங்காங்கில் வசிக்கிறார். என்றார்.
முன்னதாக, குவோக்கை ஒரு “போண்டான்” என்று நஸ்ரி வர்ணித்திருந்தார்.
இரண்டு தரப்பும் திட்டமிட்டே தேர்தல் நாடகத்தை நடத்துகின்றனர்!
மக்கள் உண்மையான தேர்தல் கால பிரச்சணைகளை மறந்து தேவையற்ற பிரச்சணைகளில் மூழ்கியிருக்க திட்டமிட்டு செய்யப்படுத்தப்படும் நாடகமாகும் இது.
இரு தரப்புமே தத்தம் இன மக்களிடையே தாங்களே அவர்தம் உரிமையைக் காப்போர் என்ற போக்கில் பேசி தேர்தலில் அனுதாப அலையை ஏற்படுத்த முயலுகின்றனர்.
நல்ல தேர்தல் நாடகம்.