ஈக்குவானிமிட்டி உல்லாசப் படகு கைப்பற்றப்பட்டது குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க 1எம்டிபி அவைத் தலைவர் இர்வான் மறுப்பு

1எம்டிபி   அவைத்தலைவர்   இர்வான்  செரிகார்   அப்துல்லா    இந்தோனேசிய   அதிகாரிகளும்   அமெரிக்க   மத்திய  புலனாய்வுத்  துறை(எப்பிஐ)யும்  கைப்பற்றிய   ஈக்குவானிமிட்டி   உல்லாசப் படகு  தொடர்பாக   செய்தியாளர்கள்   கேட்ட   எந்தக்  கேள்விக்கும்  பதிலளிக்கவில்லை.

இன்று  காலை   உள்நாட்டு  வருமான  வரி  வாரிய  நிகழ்வு  ஒன்றில்  கலந்து  சைபர்  ஜெயா   வந்த    இர்வான்  நிகழ்வு   முடிந்து  திரும்பிச்  செல்ல  முனைந்தபோது    அவரைச்   சூழ்ந்துகொண்ட    செய்தியாளர்கள்,   அவரிடம்  அந்த  உல்லாசப்  படகு  கைப்பற்றப்பட்டது    தொடர்பாகக்  கேள்விமேல்  கேள்விகளாகக்  கேட்டுத்   திணறடித்தனர்.

“அந்தப்  படகைப்  பற்றி   டான்ஸ்ரீ  என்ன    நினைக்கிறீர்கள்?”

“படகைத்   திரும்பப்  பெற   மலேசிய   அரசாங்கம்  முயலுமா?”

“படகு   திரும்பக்  கிடைக்குமா?”

இப்படிப்  பல  கேள்விகளை   அடுக்கிக்  கொண்டே  போனார்கள்.

ஆனால்,  கருவூலத்தின்    தலைமைச்     செயலாளருமான     இர்வான்    அவர்களின்  எந்தக்   கேள்விக்கும்  பதில்  அளிக்கவில்லை.

செய்தியாளர்களும்  விடவில்லை.  கேள்விகளைக்   கேட்டவாறே   அவர்   பின்னே  தொடர்ந்து   சென்றனர்.  அவர்  “பின்னர்”  என்று  சொல்லிவிட்டுப்  புறப்பட்டுச்   சென்றார்.