பெட்ரோனாஸ் RM19 பில்லியன் ஈவுத்தொகையை அரசாங்கத்திற்குச் செலுத்தும்

பெட்ரோலியம் நேசனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்), RM19 பில்லியன் ஈவுத்தொகையை அரசாங்கத்திற்குச் செலுத்த உறுதியளித்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி வான் சுல்கிப்ளி வான் அரிஃபின் கூறினார்.

கடந்த ஆண்டு, அந்தச் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் ஒரே பங்குதாரரான அரசாங்கத்திற்கு, RM16 பில்லியனை அந்நிறுவனம் கொடுத்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டின் RM44.5 பில்லியன்களை விட அதிகமாக, இவ்வாண்டு RM55 பில்லியனை மூலதனச் செலவுகளாக அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

2017, 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், பெட்ரோனாஸ்-இன் நிகர இலாபம் 91.2% அதிகரித்து, 2016-ல் RM 23.8 பில்லியனிலிருந்து, RM45.4 பில்லியனாக உயர்ந்துள்ளது.