சிஐடி இயக்குனரின் வங்கிக் கணக்கை ஆஸ்திரேலியா கைப்பற்றியது

 

ஆஸ்திரேலிய போலீஸ், புக்கிட் அமான் சிஐடி இயக்குனர் வான் அஹமட் நாஜ்முடின் முகமட்டின் சிட்னி வங்கிக் கணக்கை முடக்கியுள்ளது. அக்கணக்கில் A$320,000 (ரிம971,800) இருக்கிறது.

சிட்னி மோர்னிங் ஹெரால்ட் செய்திப்படி, வான் அஹமட்டின் கணக்கில் போடப்பட்ட பணம் சலவை செய்யப்பட்டது அல்லது குற்றச்செயல்கள் வழி கிடைத்த வருமானம் ஆகும் என்று ஆஸ்திரேலியன் பெடரல் போலீஸ் (எஇஎப்) கூறுகிறது.

அக்கணக்கை மூடுவதற்கும் அக்கணக்கிலுள்ள பணத்தை பறிமுதல் செய்யவும் எஇஎப் நியூ சவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கடந்த ஆண்டு பறிமுதல் செய்வதற்கான உத்தரவை அளித்தது.

தாம் அப்பணத்தை தமது மகளின் பட்டப்படிப்பு செலவிற்காக சிட்சி வங்கியில் வைத்திருந்ததாகவும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வழக்காட செலவு அதிகமாகுமாதல் அப்பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று வான் அஹமட் கூறினார்.

ஆனால், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அவர் கூறிக்கொண்டார்.

இந்த வழக்கு பற்றி போலீஸ் படைத் தலைவருக்கு (ஐஜிபி) தெரியும் என்று வான் அஹமட் மேலும் கூறினார்.