ஹரப்பான் வெற்றி பெற்றால் பிபிஎஸ்எம்ஐமீது முடிவெடுக்கக் கருத்துக்கணிப்பு

பொதுத்   தேர்தலில்  பக்கத்தான்   ஹரப்பான்  வென்று   ஆட்சி   அமைத்தால்    பள்ளிகளில்    கணிதம்,  அறிவியல்   பாடங்களை    ஆங்கிலத்தில்  கற்பிக்கும்  முறையைத்    திரும்பக்  கொண்டு  வரலாமா  என்பதை   மலேசியர்களே  முடிவு  செய்யும்  வாய்ப்பைப்  பெறுவார்கள்.

அக்கொள்கைக்கு  ஆதரவும்   எதிர்ப்பும்   இருப்பதாக  நேற்று    செய்தியாளர்  கூட்டமொன்றில்   ஹரப்பான்   தலைவர்   டாக்டர்  மகாதிர்   கூறினார்.

“அது  தொடர்பாக  மக்கள்   என்ன   நினைக்கிறார்கள்   என்பது   தெரிய  வேண்டும்.  அது   என்னுடைய  பரிந்துரைதான்.  முதலில்   ஏற்றுக்கொள்ளப்பட்டு   அமல்படுத்தப்பட்டது,  பிறகு  அகற்றப்பட்டது.  ஆனால்,  அது  வேண்டும்   என்ற  கோரிக்கை  இருக்கவே   செய்கிறது.

“சில  பள்ளிகள்   ஆங்கிலத்தைப்  பயன்படுத்துகின்றன.  மற்றவை பகாசா  மலேசியாவை.  நாங்கள்   அரசாங்கம்   அமைத்தால்   ஒரு கருத்துக்கணிப்பு    நடத்துவோம்”,  என்றவர்  சொன்னார்.