பினாங்கு சுரங்கப்பாதை விவகாரம்: மேலும் ஒரு டத்தோ கைது

மலேசிய  ஊழல்தடுப்பு   ஆணையம் (எம்ஏசிசி),   ரிம6.3 பில்லியன்   மதிப்பிலான   பினாங்கு கடலடிச் சுரங்கப்பாதைத்   திட்ட   ஊழல்மீதான  விசராணையைத்    தடுப்பதற்கு   ரிம3மில்லியன்  ரிங்கிட்    பெற்றதாகக்  கூறப்படும்   ‘டத்தோ’  ஒருவரைக்  கைது   செய்துள்ளது.

அவ்விசாரணை  பற்றி   நன்கு    அறிந்த   வட்டாரமொன்று   அந்த  64-வயது   நபர்   நேற்று   கோலாலும்பூரில்   கைது  செய்யப்பட்டார்  எனத்   தெரிவித்தது.

அம்மனிதர்   அத்திட்டம்   மீதான   எம்ஏசிசி  விசாரணையைத்   ‘தீர்த்து  வைப்பதற்கு’   கைம்மாறாக  ரிம3மில்லியனைப்  பெற்றுக்கொண்டதாக   தெரிகிறது.

எம்ஏசிசி  துணைத்   தலைமை   ஆணையர்   அஸாம்  பாகியைத்   தொடர்புகொண்டபோது   அம்மனிதர்  கைதானது   உண்மைதான்  என்பதை  அவர்   உறுதிப்படுத்தினார்.

கடந்த   செவ்வாய்க்கிழமை  அத்திட்டம்மீதான  விசாரணையைத்   தடுத்து  நிறுத்துவதாகக்  கூறி  ரிம19மில்லியன்  பெற்றுக்கொண்ட  ‘டத்தோ  ஸ்ரீ’   பட்டம்      கொண்ட    ஒரு    வணிகரை    எம்ஏசிசி  கைது  செய்தது.