மஇகா தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவரது செகாமாட் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ளும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாய் கூறுகிறார் இளைஞர் பகுதி தலைவர் சி.சிவராஜா.
“தலைவர் நீண்டகாலம் அப்பகுதியில் பணியாற்றி வந்துள்ளார்.
“கிடைக்கும் பின்னூட்டங்களிலிருந்து அவர்(சுப்ரமணியம்) எளிதாக தொகுதியைத் தக்க வைத்துக்கொள்வார் என்று நம்புகிறோம். அது பிரச்னையாக இருக்காது”, என இன்று காலை கோலாலும்பூரில் கட்சித் தலைமையகத்தில் சிவராஜா கூறினார்.
முன்னதாக, சிவராஜா, 14வது பொதுத் தேர்தலில் “கடும் போட்டி நிலவக்கூடிய” 14 இடங்களை மஇகா இளைஞர் பகுதி அடையாளம் கண்டிருப்பதாகத் தெரிவித்தார். அவற்றில் செகாமாட் உள்பட 5 நாடாளுமன்றத் தொகுதிகளும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளிட்டிருக்கின்றன.
“கடும் போட்டி நிலவக்கூடிய” என்று எதுவும் மில்லை சார் ! வெறுமனே தோற்கும் இடங்கள்தான் உள்ளது ! Mahathir காலத்துல , உங்களையெல்லாம் ஜெயிக்க வச்சு அழகு பார்த்தவர் அவர். அவர் இல்லாமல் நீங்கள் என்ன சாதிச்சிர முடியும் ? விரலை சுப்பிக்கிட்டு ஒக்காந்துருப்பீங்க தேர்தல் முடிந்ததும் ! அப்பா தான் நாங்க MAIKA HOLDING மேல RCI வேணும்னு தூண்டி விட்டுகிட்டு இருப்போம் ! எங்கையும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது , 13 மாநிலங்கள் , ஒரே நாயகன் , மகாதீர் !
அப்படியா, சந்தோஷம், பிறகு என்ன எத்தனை வாக்கு வித்தியாசயத்தில் வெல்வார் என்றும் சொல்லிவிட வேண்டியது தனே. வாய்ப்பு பிரகாசமாக உள்ளது? என்ற ஒரு கேள்வியை முன் வைக்கும் போதே தெரிகிறது உங்களின் அறிக்கைகள்.
அது மக்கள் அல்லவா சொல்ல வேண்டும். வெல்லபோவது யார் என்று. நீங்கள் கணிக்கிரிர்கள் யார் வெல்ல போகிறார்கள் என்று. உங்கள் மஇகா தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் என்ன சொல்ல வருகிறார்.
அடுத்து, உங்களை கேட்டு கொள்வது நீங்கள் அங்கு சென்று செகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் அங்கு உள்ள மக்களை சந்தித்து அவர்களை உங்கள் பின்னால் வைத்து கொண்டு சொல்லுங்கள். வெல்ல போவது யார் என்று. அதில் மஇகா தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் 100% வெல்வார் என்றும். அதை விடுத்து ஒரு புது சாமியார் போல இப்போதே கணித்து சொல்கிறிர்கள். இந்த தேர்தலில் எல்லா இந்திய வாக்காளர்களும் எல்லோரும் வெல்ல வேண்டும் என்பதே நமது ஆவல்.
அதில் அந்த தேர்வு வேட்பாளர்கள் அவர்கள் இதுவரை மக்களுக்கு செய்த சமுக சேவைகள் என்னவென்று சொல்லட்டும். அதை விடுத்து கிடைப்பதை எல்லாம் சுருட்டி கொண்டு நல்லவர்கள் போல் தேர்தல் சமயத்தில் குளிர்சாதன அறையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கைகள் விடுவது சிரிப்பு வருகிறது தலைவா. நன்றி
நம்பிக்கை, அவநம்பிக்கையாகாமல் இருந்தால் சரி.