நஸ்ரி மன்னிப்பு கோர வேண்டும், மசீச இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

 

தொழிலதிபர் ரோபர்ட் குவோக் குறித்து கூறிய கருத்துக்காக சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் நஸ்ரி அசிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி மசீச இளைஞர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.

மசீசவின் 69 ஆம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டம் இன்று மசீச தலைமையகத்தில் நடைபெற்றது. அப்போது மசீச இளஞர்கள் அங்கு நஸ்ரிக்கு எதிரான ஆர்பாட்டத்தை நடத்தினர்.

உண்மையில், நாங்கள் ஆர்ப்பாட்டம் எதுவும் நடத்தும் எண்ணம் கொன்டிருக்கவில்லை. ஆனால், இந்த விருப்பம் கீழ்நிலை உறுப்பினர்களிடமிருந்து வந்தது. நாங்கள் அவர்கள் விரும்புவதை மதிக்கிறோம். ஆகவே, ஆர்பாட்டத்தை நடத்தினோம் என்று மசீச செய்தியாளர்களிடம் இளைஞர் பிரிவு தலைமைச் செயலாளர் லியோங் கிம் சோன் கூறினார்.

சீனச் சமூகத்திலுள்ள அனைவரிடமும் நஸ்ரி மன்னிப்பு கோர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

அந்த ஆர்பாட்டத்தில் சுமார் 30 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் மசீச இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்று லியோங் கூறினார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சீனமொழியில் நஸ்ரி மன்னிப்பு கோர வேண்டும் என்று எழுதப்பட்டிருந்த பதாதைகளை ஏந்தியிருந்தனர்.