தம்மை சர்ச்சைக்குரிய பினாங்குக் கடலடி சுரங்கப்பாதைத் திட்டத்துடன் தொடர்புப்படுத்திப் பேசியதற்காக லிம் குவான் எங் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாலிங் எம்பி அப்துல் அசீஸ் அப்துல் ரகிம் கூறினார்.
குவான் எங் தம் மன்னிப்பை மையநீரோட்ட பத்திரிகைகளிலும் செய்தி அலைவரிசைகளிலும் இணையத் தளங்களிலும் வெளியிட நான்கு நாள் அவகாசம் வழங்குவதாகக் கூறிய அந்த அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர், தவறினால் பினாங்கு முதலமைச்சர்மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்றார்.
அண்மையில் லிம், மாநில கடலடிச் சுரங்கப்பாதை திட்டத்துக்கு ஆலோசனைச் சேவை வழங்குவதற்காக பல மில்லியன் ரிங்கிட் பெற்றதாகக் கூறப்படும் அசீசை எம்ஏசிசி ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று வினவினார். அதன் தொடர்பில்தான் அசீஸ் மேற்கண்டவாறு கூறினார்.