பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பாலிங் எம்பி அப்துல் அசீஸ் அப்துல் ரகீமிடம் மன்னிப்பு கேட்க மாட்டார். மாறாக அவரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராகிறார்.
“அசீஸ் ரகிம். தயை செய்து வழக்கு தொடருங்கள்.
“நாம் நீதிமன்றத்தில் சந்திப்போம்”, என இன்று நாடாளுமன்ற வளாகத்தில் லிம் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார்.
மாநில கடலடிச் சுரங்கப்பாதை திட்டக் குத்தகை நிறுவனமான ஸெனித் கட்டுமான நிறுவனத்திடமிருந்து ஆலோசனைச் சேவைகளுக்காக தாம் ரிம3 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகக் கூறியதற்கு லிம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று அசீஸ் இறுதி எச்சரிக்கை விடுத்திருப்பது குறித்துக் கருத்துரைத்தபோது டிஏபி தலைமைச் செயலாளரான லிம் இவ்வாறு கூறினார்.