பணத்தை திரும்பப் பெற சிஐடி தலைவருக்கு செலவு அதிகமாகும், ஐஜிபி கூறுகிறார்

 

புக்கிட் அமான் சிஐடி தலைவர் வான் அஹமட் நஜாமுடின் முகமட் ஆஸ்திரேலிய வங்கியில் வைத்திருந்த கணக்கை முடக்கி அக்கணக்கிலிருந்த A$320,000(ரிம1 மில்லின்)-ஐ ஆஸ்திரேலிய அதிகாரிகள் கைப்ப/ற்றியுள்ளனர். அப்பணத்தை திரும்பப்பெறுவதற்கான செலவை ஏற்றுக்கொள்ளும் தகுதி வான் அஹமட்டுக்கு இல்லை என்று கூறப்படுகிறது.

அவர் பணத்தை திரும்பப்பெற விரும்புகிறார். அது அவரது உரிமை. ஆனால், அப்பணத்தை திரும்பப்பெறுவதற்கான செலவு அதிகமாக இருக்கும் என்று போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) இன்று புக்கிட் அமானின் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சலவை செய்யப்பட்ட பணம் என்ற சந்தேகத்தில் ஆஸ்திரேலியாவில் முடக்கப்பட்டுள்ள பணத்தை திரும்பப்பெற வான் அஹமட் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்விக்கு ஐஜிபி மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

மேலும், ஐஜிபி பூஸியிடம் பணம் கைப்பற்றபட்டதற்கு எதிராக சிஐடி தலைவர் மேல்முறையீடு ஏதும் செய்துள்ளாரா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த பூஸி, இல்லை, அவர் முறையீடு செய்யவில்லை என்றார்.

ஆஸ்திரேலிய போலீஸ் படையைப் பொறுத்தவரையில் வான் அஹமட் கணக்கிலுள்ள பணம் சலவை செய்யப்பட்டது. அக்கணக்கில் சுமார் ஒரு மாதத்தில் ஏராளமான டிப்போசிட்கள், ஒவ்வொன்றும் ஆஸ்திரேலிய டாலர் 10,000க்கும் குறைவானது, போடப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய சிட்னி மோர்னிங் ஹரால்ட் செய்திப்படி, அக்கணக்கிலிருந்த பணம் கடந்த ஆண்டில் கைப்பற்றப்பட்டது.

இந்த விவகாரம் புக்கிட் அமானுக்கு 2016 ஆம் ஆண்டிலிருந்து தெரியும் என்றும், அது குறித்து மேற்கொள்ளப்பட்ட உள்விசாரணையில் வான் அஹமட் அவரது ஷா அலாம் வீட்டை விற்றதன் மூலம் கிடைத்த பணம் அது என்றும், ஆகவே அவர் தவறு ஏதும் செய்யவில்லை என்றும் புக்கிட் அமான் கூறிற்று.