ஒருதலைப்பட்சமாக குழந்தைகளை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்வது சம்பந்தப்பட்ட வழக்குகளில், இந்திரா காந்தி சம்பந்தப்பட்டிருந்த வழக்கு போன்றவற்றில், அரசாங்கத்தில் இருப்பவர்கள்தான் மாறுபாட்டை கொணர முடியும் என்று மலேசியாகினிக்கு அளித்த ஒரு தனிப்பட்ட நேர்காணலில் சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் கூறிக்கொண்டார்.
ஒருதலைப்பட்சமாக தமது மூன்று குழந்தைகளை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்த தமது முன்னாள் கணவருக்கு எதிரான வழக்கில் இந்திரா காந்தி சிக்கியிருந்ததை நஸ்ரி குறிப்பிட்டார்.
தாம் ஒரு வழக்கறிஞர் என்றும், நியாயமாக இருக்க பயிற்சி அறிக்கப்பட்டவர் என்றும் தம்முடைய மனதில் நீதிக்கே முதலிடம் என்றும் கூறிய நஸ்ரி, தாம் எப்போதும் நீதியின் பக்கம் இருப்பதால், அது அநேகமாக சில வேளைகளில் தமது சமூகத்தின் நலனுக்குகூட எதிரானதாகி விடுகிறது என்றாரவர்.
இந்திரா காந்தி விவகாரம். அவருக்காக போராடியது டிஎபி அல்ல, அவர்கள் எது வேண்டுமானாலும் கூறலாம் அல்லது எவ்வளவு சத்தமாக வேண்டுமோ அவ்வளவுக்கு அவர்கள் கூப்பாடு போடலாம்.
“அது அவர்கள் அல்ல. அவர்கள் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் அரசாங்கத்தில் இல்லையென்றால், நீங்கள் எதுவும் செய்ய முடியாது. அது அரசாங்கத்தில் இருப்பவர்களால்தான் – மசீச, கெராக்கான், மஇகா – (செய்ய முடியும்). இந்திரா காந்தி வழக்கை ஓர் எடுத்துக்காட்டாகக் கொண்டால், பத்து வருடங்களுக்குப் பிறகு நாங்கள் போராடினோம், இறுதியில் நீதிமன்றம் சரியான முடிவெடுத்தது”, என்று நஸ்ரி கூறினார்.
“ஆகவே, நீங்கள் டிஎபிக்கு நன்றி கூறாதீர், ஆனால் இந்தக் கட்சிகளுக்கு நன்றி கூறுங்கள்”, என்று அமைச்சர் நஸ்ரி வேண்டுகோள் விடுத்தார்.
நன்றி1 அதேபோல அந்தக் குழைந்தையின் முகத்தைக் காட்டாமல் இருக்கிறானே அந்த நாடோடி அவனையும் கண்டுப்பிடித்து அந்தக் குழந்தையைத் தாயிடம் ஒப்பைடைப்பது தானே! அது முடிந்தால் “நீங்கள்” தான் என்பதைநான் ஒப்புக் கொள்ளுகிறேன்!
இப்படியும் ஒரு முட்டாள்! வாழ்க பாரிசான்!
puthiya kathai
நாங்கள் முட்டாள் கிடையாது. சகோதரி இந்திரா காந்திக்கு நீதி கிடைக்க போராடியது யார் என்று நாங்கள் அறிவோம். பைத்தியக்காரன்போல பேசாதீர்.அவரின் கடைக்குட்டியை தாயிடம் ஒப்படைக்க ஆவன செய்வீர்.